close
Choose your channels

வெள்ள நிவாரத்திற்கு உதவும் ரஜினியின் 'சிவாஜி தி பாஸ்"

Saturday, December 12, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்று தனது பிறந்த நாளை கொண்டாடவில்லை என சூப்பர்ஸ்டார் அறிவித்திருந்தாலும் அவரது ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை ஆக்கபூர்வமாக வெள்ள நிவாரண பணி செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள தமிழர்கள் ரஜினியின் பிறந்தநாளை இன்று வித்தியாசமாக கொண்டாடுகிறார்கள். அதாவது அமெரிக்காவில் உள்ள ரெண்டன் ராக்ஸி என்ற திரையரங்கில் ரஜினி நடித்த 'சிவாஜி தி பாஸ்' படம் இன்று திரையிடப்படுகிறது. இந்த காட்சியில் கிடைக்கும் மொத்த வசூல் பணத்தையும் சென்னை மற்றும் கடலூர் வெள்ள நிவாரண நிதிக்காக வழங்கவுள்ளனர். இந்த படத்தை திரையிட ஏவிஎம் நிறுவனம் இலவசமாக அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சமும், கோடிக்கணக்கில் நிவாரண பொருட்களும் ரஜினிகாந்த் அளித்துள்ள நிலையில் அவருடைய ரசிகர்களும் வெள்ள நிவாரணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment