சிவாஜி சிலை அகற்றும் வழக்கில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Thursday,December 17 2015]

சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலையை அகற்றும் வழக்கு குறித்து இன்று விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசுக்கு ஒருவருடம் அவகாசம் அளித்துள்ளனர்.


சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் சிலையை அகற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையில் 'ஒரு ஆண்டிற்குள் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் என்றும் அதன்பின்னர் சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று பதிலளித்தது

தமிழக அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஒரு வருடத்தில் சிவாஜி சிலை அகற்றப்படும் என்பதால், ஓராண்டு கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

More News

தனுஷின் 'தங்கமகன்' படத்திற்கு டபுள் சென்சுரி அந்தஸ்து

இந்தியாவிலேயே அதிக திரைப்படங்கள் ரிலீஸ் செய்யும் கோலிவுட் திரையுலகில் வருடத்திற்கு சுமார் 200 படங்கள் வெளியாகின்றது...

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் இணையும் தனுஷ்-சமந்தா-அனிருத்

தனுஷ் நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், கிட்டத்தட்ட தனுஷின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்...

கூகுள் தேடலில் சாதனை புரிந்தது 'பாகுபலி'

2015ஆம் ஆண்டில் கூகுளில் அதிக நபர்களால் தேடப்பட்ட இந்திய திரைப்படங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது

எந்திரன் 2' வில்லன் அறிவிப்பு. அதிகாரபூர்வமாக வெளியான பத்திரிகை குறிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் பிரமாண்டமாக உருவாகவுள்ள 'எந்திரன் 2'...

சூர்யா-விஷால்-ஜெயம் ரவியுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்

வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் சூர்யாவின் 'பசங்க 2', வெற்றிமாறனின் 'வில அம்பு', விமல் நடித்த 'அஞ்சல'...