சிவாஜி சிலை அகற்றும் வழக்கில் நீதிபதிகள் முக்கிய உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மெரினா கடற்கரை எதிரில் உள்ள, நடிகர்திலகம் சிவாஜி சிலையை அகற்றும் வழக்கு குறித்து இன்று விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் சிவாஜி சிலையை அகற்ற தமிழக அரசுக்கு ஒருவருடம் அவகாசம் அளித்துள்ளனர்.
சிவாஜி சிலையை அகற்ற வேண்டும் என ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் சிலையை அகற்றாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று ஐகோர்ட்டில் தொடரப்பட்டது. இந்த வழக்கின் கடந்த விசாரணையில் 'ஒரு ஆண்டிற்குள் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டி முடிக்கப்படும் என்றும் அதன்பின்னர் சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் இருந்து அகற்றி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்றும் தமிழக அரசு இன்று பதிலளித்தது
தமிழக அரசின் பதிலை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஒரு வருடத்தில் சிவாஜி சிலை அகற்றப்படும் என்பதால், ஓராண்டு கால அவகாசம் அளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments