சிவாஜி புரடொக்ஷன்ஸ் அடுத்த தயாரிப்பில் விஜய், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ்?

  • IndiaGlitz, [Sunday,February 19 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகிய சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' என்ற சூப்பர்ர் ஹிட் படத்தையும், அதன் பின்னர் ஐந்து வருடங்கள் கழித்து கடந்த 2010ஆம் ஆண்டு அஜித் நடித்த 'அசல்' ஆகிய படங்களை தயாரித்தது.

இந்நிலையில் கடந்த 7 வருடங்களாக தயாரிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்த சிவாஜி புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது விஜய், விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகிய மூன்று முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக விஜய்சேதுபதியுடன் 'சேதுபதி' இயக்குனர் அருண்குமார் இயக்கவுள்ள ஒரு படத்திற்காகவும், ராகவா லாரன்ஸ் உடன் 'சந்திரமுகி 2' படத்திற்காகவும் இந்நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேபோல் இந்நிறுவனம் ஏற்கனவே இளையதளபதி விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் மிகவிரைவில் இதுகுறித்த அறிவிப்பையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

More News

சரியான நேரத்தில் தல ரசிகர்களின் சரியான சமுதாய பணி

நடிகர்களின் ரசிகர்கள் என்றால் படம் வெளியாகும் தினத்தில் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்பவர்கள் மட்டுமின்றி ஆக்கபூர்வமான சமுதாய பணிகளிலும் ஈடுபடுபவர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகிக்கொண்டு வருகிறது

திமுக எம்.எல்.ஏக்களை வெளியேற்ற மாறுவேடத்தில் காவல்துறை அதிகாரி. புகைப்பட ஆதாரம்

தமிழக சட்டமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற பெயரில் நடந்த ஜனநாயக கேலிக்கூத்தை அனைவரும் அறிவோம்.

ஜல்லிக்கட்டு மாணவர்களுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் செய்த உலக சாதனை

கடந்த மாதம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் உலகின் கவனத்தை மெரீனா நோக்கி திரும்ப வைத்தது

நெடுவாசல் காப்போம். ஜி.வி.பிரகாஷின் விழிப்புணர்வு முயற்சி

தமிழகத்தை நோக்கி பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. காவிரி நீர் பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை உள்பட பல பிரச்சனைகளை நமது அரசு எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் யார் யார்?

சபாநாயகரின் உத்தரவை அடுத்து 88 திமுக எம்.எல்.ஏக்களையும் வெளியேற்றும் முயற்சியில் சபைக்காவலர்கள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.