சிவாஜி கணேசனின் பாசமலர் தங்கைதான் லதா மங்கேஷ்கர்… பலரும் அறியாத தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் கடும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் மறைந்த பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரை தன்னுடைய உடன்பிறவா சகோதரியாகவே நடிகர் திலகம் சிவாஜி கணேஷன் அவர்கள் பாவித்தார் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் தமிழில் ஒருசில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். அப்படியிருக்கும்போது நடிகர் சிவாஜி கணேசனுக்கும் பாடகி லதா மங்கேஷ்கருக்கும் நெருங்கிய அண்ணன்- தங்கை உறவு இருந்திருக்கிறது. தனனைவிட ஒரு வயது மட்டுமே பெரியவரான சிவாஜி கணேசன், லதா சென்னை வரும்போதெல்லாம் தன் வீட்டில் தங்குவதற்கு வசதியாகத் தன் பங்களாவின் ஒரு பகுதியில் இன்னொரு குட்டி பங்களாவையே கட்டித் தந்திருக்கிறாராம்.
மேலும் அந்தப் பங்களாவை சிவாஜி இரண்டே மாதத்தில் கட்டி முடித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர “ஆனந்தம்” எனும் திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய “ஆராரோ ஆரிராரோ” எனும் பாடலுக்கு அவர் சம்பளமே பெற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. காரணம் அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் பிரபு. அண்ணன் சிவாஜிக்காக இதைக்கூடவா செய்யமாட்டேன் என்று பாடகி லதா மங்கேஷ்கர் சம்பளம் வாங்க மறுத்துவிட்டாராம்.
இப்படி சிவாஜி கணேசன் பாடகி லதா மங்கேஷ்கரை தன்னுடைய சொந்த சகோதரி போலவே பாவித்துள்ள தகவல் தற்போது ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது பாடகி லதா தன்னுடைய வீட்டில் இருந்து சிவாஜி குடும்பத்திற்கு புதுத்துணி மற்றும் பலகாரங்களையும் அவர் அனுப்பி வைப்பாராம். கடந்த வருடம் வரை இந்தப் பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதேபோல அண்ணன் சிவாஜி வீட்டிலிருந்தும் பாடகி லதா மங்கேஷ்கரின் வீட்டிற்கு அவ்வபோது பலகாரம் மற்றும் புதுத்துணிகள் பரிமாறிக் கொள்ளப்பட்டு இருக்கின்றன. இருபெரும் நட்சத்திரங்கள் தற்போது மறைந்த நிலையில் அவர்களைப் பற்றிய தகவல் ரசிக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
The legend #LataMangeshkar ji ??
— Vikram Prabhu (@iamVikramPrabhu) February 6, 2022
Family. In loss for words??
???????? pic.twitter.com/lW7EZYaY9S
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments