58 வருடங்களுக்கு பின் ரீமிக்ஸ் செய்யப்பட்ட சிவாஜி கணேசன் பட பாடல்: வீடியோ வைரல்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ‘புதிய பறவை’ என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை 58 வருடங்களுக்கு பின்னர் விஜய் ஆண்டனியின் ’கொலை’ படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பதும் இந்த பாடலின் வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1964 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், சரோஜாதேவி, எம் ஆர் ராதா நடிப்பில் வெளியான திரைப்படம் ’புதிய பறவை’. இந்த படத்தில் இடம்பெற்ற ’பார்த்த ஞாபகம் இல்லையோ’ என்ற பாடல் இன்றுவரை பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 58 ஆண்டுகள் கழித்து இந்த பாடல் விஜய் ஆண்டனி நடித்து வரும் ’கொலை’ என்ற படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலின் வீடியோவை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர்.
விஜய் ஆண்டனி, ரித்திகாசிங், ராதிகா உள்பட பலர்நடித்த இந்த படத்தை ‘பாலாஜி குமார்’ இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ‘விடியும் முன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு கிரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.
Happy to launch the re-imagining of the iconic #PaarthaNyabhagam by @ggirishh from @vijayantony’s #KOLAI
— A.R.Rahman (@arrahman) September 23, 2022
Best wishes team ????
➡️ https://t.co/VSI97GhUtz
??️@shreyaghoshal
?? @DirBalajiKumar @ritika_offl @Meenakshiioffl @FvInfiniti @lotuspictures1 @saregamasouth @DoneChannel1 pic.twitter.com/qhghbg6Ngi
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments