சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணைமுதல்வருடன் கமல்-ரஜினி

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் மணிமண்டபத்தை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்றுமுன் திறந்து வைத்து சிவாஜி கணேசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணைமுதல்வர் ஓபிஎஸ் அவர்களுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர்களும் சிவாஜி குடும்பத்தினர்களாகிய ராம்குமார், பிரபு, விக்ரம் பிரபு உள்பட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்

மேலும் இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் அமைச்சர் பெருமக்களுடன் கமல், ரஜினி ஆகியோர்களும் உட்கார்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால் மற்றும் நிர்வாகிகளான பொன்வண்ணன்,கார்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த விழா கொட்டும் மழையிலும் சிவாஜி ரசிகர்களின் பெரும் ஒத்துழைப்புடன் தற்போது நடந்து வருகிறது.


 

More News

கமல், ரஜினியை கைகுலுக்கி வரவேற்ற ஓபிஎஸ்: பொன்னாடை போர்த்திய அமைச்சர்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய மணிமண்டபம் சற்றுமுன் திறக்கப்பட்டது.

கமல் என்னிடம் ரகசியத்தை கூற மறுக்கின்றார். சிவாஜி விழாவில் ரஜினி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தன்னிடம் ரகசியத்தை கூற மறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்தியன்' படத்தின் 2ஆம் பாகத்தின் டைட்டில்: கமல் கூறிய ஆலோசனை

கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் மீண்டும் இணைந்து 'இந்தியன் 2' திரைப்படத்தில் பணிபுரிவது உறுதியாகிவிட்டது என்பதையும் இந்த படத்தை தில்ராஜூ தயாரிக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிக்பாஸ் தமிழ் வெற்றியாளர் இவர்தான்

கடந்த 100 நாட்களாக பரபரப்பாக ஒளிபரப்பாகிய பிக்பாஸ் தமிழ் நேற்று முடிவுக்கு வந்தது. உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முறைப்படி வெற்றியாளரை அறிவித்தார்

பிக்பாஸ் ஃபைனலில் கமல்-ஷங்கரின் 'இந்தியன் 2' அறிவிப்பா?

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் பிரமாண்டமான மேடையில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் இதே மேடையில் இன்னொரு முக்கிய அறிவிப்பும் வெளியியாகவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.