'பிகில்' ஆடியோ விழா: அதிமுகவை அடுத்து சிவாஜி ரசிகர்களும் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
‘பிகில்’ திரைப்பட விழாவில் விஜய் பேசியது குறித்து அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதே விழாவில் நடிகர் விவேக் பேசியது குறித்து தற்போது சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிவாஜி சமூக நலப்பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
"பிகில்” ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விவேக், 1960 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர்திலகம் சிவாஜி - வைஜெயந்தி மாலா நடித்த "இரும்புத்திரை" திரைப்படத்தின் "நெஞ்சில் குடியிருக்கும்” என்று தொடங்கும் அருமையான பாடலைக் கிண்டலடித்திருக்கிறார்.மேடை கிடைத்துவிட்டால், கூட்டத்தைப் பார்த்துவிட்டால், சிலர் உளற ஆரம்பித்துவிடுவார்கள். அந்த வரிசையில், நடிகர் விவேக்கும் இணைந்துள்ளார். எந்த நடிகரை வேண்டுமானாலும் தூக்கிவைத்துக் கொண்டாடுங்கள், எந்த இசையமைப்பாளர் அல்லது பாடலை வேண்டுமானால் பாராட்டுங்கள், தவறில்லை. ஆனால், ஒரு நடிகரை காக்காய் பிடிப்பதற்காக, ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள ஒரு பாடலை கிண்டலடிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஏதோ இப்போதுதான் அந்தப் பாடல் மக்களுக்கே தெரிய வருவதுபோலக் கூறும் இந்த ஞானசூனியம், "நெஞ்சில் குடியிருக்கும்” என்ற 1960 ல் வெளிவந்த பாடல் மிகவும் வரவேற்பைப் பெறவில்லை என்றால் அதனை ஏன் அதே டியூனை மீண்டும் பயன்படுத்தவேண்டும் எனக் கூறத் தயாரா? டியூனுக்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக, பிரபலமான டியூன் என்பதாலேயே அதனைக் காப்பியடித்து பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற சாதாரண அறிவுகூட இல்லாமல் பேசியிருக்கிறார் விவேக்.
ஏற்கனவே, ஒரு திரைப்படத்தில், "நடிகர்திலகத்தின் புகழ்பெற்ற பராசக்தி திரைப்படத்தில் நீதிமன்றக் காட்சி வசனத்தைப் பேசிக் கிண்டலடித்திருந்தார் விவேக். இப்போது நடிகர்திலகத்தின் அருமையான திரைப்படப் பாட்லை பொது மேடையில் கிண்டலடித்திருக்கிறார். இதுபோல, தொடர்ந்து விவேக் செய்தால், அவருக்கெதிராக ரசிகர்களை ஒன்றுதிரட்டி, நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை போராட்டம் நடத்தும் என்று எச்சரிக்கையாக ' தெரிவித்துக்கொள்கிறோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout