ரூ.50 லட்சத்தை தட்டி சென்ற பிக்பாஸ் வெற்றியாளர் இவர்தான்

  • IndiaGlitz, [Monday,September 25 2017]

பிக்பாஸ் தமிழ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும்

இந்த நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தொடங்கப்பட்ட தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இறுதி நாள் நிகழ்ச்சி ஆட்டம் பாட்டோடு முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் சிவபாலாஜியும், இரண்டாவது இடத்தை நடிகர் ஆதர்ஷ் பாலகிருஷ்ணாவும் பெற்றுள்ளனர்

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஒரு தமிழ் நடிகர் என்பதும், தமிழில் ஒருசில படங்கள் நடித்த நடிகை மதுமிதாவின் கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து இங்கிலீஷ்காரன்' என்ற படத்தில் நடித்துள்ளனர்.

மேலும் முதல்கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமான முடிவடைந்ததை அடுத்து மிக விரைவில் இரண்டாம் கட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தெலுங்கில் தொடங்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.