சாப்ட்வேர் இஞ்சினியர்ன்னா சாஃப்ட்டா இருப்பேன்னு நினைச்சியா? 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்' டிரைலர்..!
- IndiaGlitz, [Monday,February 20 2023]
அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவான ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன
2 நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த ட்ரைலரில் உள்ள காட்சிகள் முழுக்க முழுக்க காமெடியாக இருப்பதால் காமெடி ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உலகமே ஸ்மார்ட்போன் மயமாகி இருக்கும் நிலையில் அந்த ஸ்மார்ட் போனால் ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக இயக்குனர் இந்த படத்தில் கூறியுள்ளார்
சிவா, அஞ்சுகுரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.