சென்னை பெண்ணை மணந்த சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான வெற்றி திரைப்படமான ‘ரெமோ’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன். இந்த படத்தின் வெற்றியை அடுத்து அவர் தற்போது கார்த்தி நடித்துவரும் ’சுல்தான்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் வரும் பொங்கல் தினத்தில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், சென்னையை சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இன்று நடந்த இந்த திருமணத்தில் சிவகார்த்திகேயன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி தனது சமூக வலைதளம் மூலம் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
பாக்யராஜ் கண்ணன் மற்றும் ஆஷா ஆகிய இருவரும் சந்தோஷமான திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒரு நல்ல பயணத்தை தொடங்க வேண்டும் என்றும் கார்த்தி தனது சமூக வலைத்தல பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்
Our #Prince @Siva_Kartikeyan anna at #Remo director @Bakkiyaraj_k's wedding ?? Wishing the couple a happy married life on behalf of all our #PrinceSK anna fans ?????? pic.twitter.com/4IW2RKWTG9
— All India SKFC ᴰᵒᶜᵗᵒʳ (@AllIndiaSKFC) October 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarush Jayaraj
Contact at support@indiaglitz.com
Comments