'தல 57' படம் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Friday,March 18 2016]

'வேதாளம்' வெற்றி படத்திற்கு பின்னர் தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 57' படத்தை இயக்குபவர் சிறுத்தை சிவா என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பதும் உறுதியாகியுள்ள நிலையில் தற்போது இருவரும் இணைந்து இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்வதில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அனிருத் மற்றும் சிறுத்தை சிவா கொடைக்கானலில் தங்கி 'தல 57' படத்தின் பாடல்கள் பணியில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும் சிறுத்தை சிவா 'தல 57' படத்தின் திரைக்கதையை முழுவதுமாக முடித்து இறுதி வடிவம் கொடுத்துவிட்டதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
'சத்யஜோதி பிலிம்ஸ்' தியாகராஜன் தயாரிக்கவுள்ள இந்த திரைப்படம் வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் இந்த படத்தின் ஹீரோயின் உள்பட மற்ற நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் படக்குழுவினர் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.