கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்கும் 'சீதாராமம்' நடிகை.. வேற லெவல் வளர்ச்சி..!

  • IndiaGlitz, [Tuesday,May 16 2023]

துல்கர் சல்மான் நடித்த ‘சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் ராணியாக நடித்த நடிகை மிருணாள் தாக்கூர் இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளான ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே உட்பட பல நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பெருமை பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை மிருணாள் தாக்கூர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து அவர் கூறிய போது ’கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள இருப்பதை எண்ணி நான் மிகவும் திரில்லாக உள்ளேன். இது என்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு கிடைத்த ஒரு பெருமையாகவே கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்வதேச நட்சத்திரங்களுடன் பழகும் வாய்ப்பை பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட் திரையுலகின் பல திரைப்படங்களில் நடித்த நடிகையின் மிருணாள் தாக்கூர் தற்போது மூன்று ஹிந்தி படங்களிலும் நானி நடித்து வரும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மிருணாள் தாக்கூருக்கு வாய்ப்பு கிடைத்தது அடுத்து அவர் இந்த ஆண்டின் முக்கிய திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு உள்ளது என்பதும் அது மட்டும் இன்றி சர்வதேச பிரபலங்களுடன் அவர் கலந்துரையாட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் 20வது முறையாக ஐஸ்வர்யா ராய் கலந்து கொள்கிறார். மேலும் அனுஷ்கா ஷர்மா, மனுஷி ஷில்லார், அதிதிராவ் ஹைத்ரி உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.