'தளபதி 66' படத்தில் மகேஷ்பாபு மகள்? இதோ ஒரு விளக்கம்

தளபதி விஜய் நடிக்கவிருக்கும் 66ஆவது திரைப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில் இதுகுறித்து மகேஷ்பாபு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் உருவாக இருக்கும் ’தளபதி 66’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் தளபதி விஜய்யின் மகளாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வம்சி மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இது சாத்தியம் என்றும் பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் மகேஷ்பாபு தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட விளக்கத்தில் தற்போது வரை ’தளபதி 66’ படத்தில் சித்தாரா நடிப்பது குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் விரைவில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் சித்தாரா அறிமுகமாவார் என்றும் அவரது வட்டாரங்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ரம்யா பாண்டியன் வீட்டுக்கு சென்றாரா தல அஜித்?

தல அஜித் எங்கள் வீட்டிற்கு வந்தார் என்றும் எங்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும் நின்று நிதானமாகப் பேசினார் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகை ரம்யா பாண்டியன் பேட்டி

'தளபதி 66': 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் பிரபல நடிகர்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க உள்ளார் என்பதும் பிரபல தெலுங்கு

ஒரு பெரிய சம்பவம் நடந்துருக்கு: சர்வைவர் லேடிகேஷ் வைரல் வீடியோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் என்ற நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான லேடிகேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு

பிக்பாஸூக்கு ஓகே சொன்ன ப்ரியங்கா: ராஜூ ஜெயமோகனுக்கு செம கலாய்ப்பு!

பிக்பாஸ் போட்டியாளர்களில் பிரியங்கா ஒருவர் தான் பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக வைத்டு இருக்கிறார் என்பதும் அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து அவர் சொல்வதை கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறது

இரண்டாம் பாகமாக உருவாகிறதா சிவகார்த்திகேயனின் சூப்பர் ஹிட் படங்கள்?

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இரண்டு படங்களில் ஒன்று இரண்டாம் பாகமாக உருவாக இருப்பதாக சமீபத்தில் அவர் தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.