பீச் மணலில் பிகினி போஸ்.. சீதா மகாலட்சுமி நடிகையின் கிளாமர் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,April 05 2023]

துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா நடித்த ’சீதாராமம்’ என்ற திரைப்படத்தில் நூர்ஜஹான் என்ற சீதா மகாலட்சுமி என்ற இளவரசி கேரக்டரில் நடித்திருந்த நடிகையின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாக வருகின்றன.

கடந்த ஆண்டு வெளியான வெற்றி திரைப்படங்களில் ஒன்று ’சீதாராமம்’ என்பதும் இந்த படம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் உள்பட பல மொழிகளில் வெளியான இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் இளவரசி நூர்ஜஹான் என்ற சீதா மகாலட்சுமி கேரக்டரில் மிருணாள் தாக்கூர் நடித்திருந்தார் என்பதும், அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியால் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்தது என்பதும், தற்போது அவர் 5 இந்தி படங்கள் மற்றும் ஒரு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் மிருணாள் தாக்கூருக்கு சுமார் 8 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து தனது பாலோயர்களை திருப்தி செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பீச் மணலில் பிகினி உடையில் உட்கார்ந்து இருக்கும் போஸ் கொடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை அளித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் 15 லட்சத்துக்கும் அதிகமான லைக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.