வேதாளம் வெற்றி. ரசிகர்களுக்கு சிறுத்தை சிவா, அனிருத் நன்றி
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் நேற்று முன் தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகி அனைத்து இடங்களிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று வருகின்றன. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் கடந்த இரண்டு நாட்களின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் 'வேதாளம்' படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிய அஜீத் ரசிகர்களுக்கும், சினிமாவை ரசிக்கும் அனைவருக்கும் 'வேதாளம்' படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
'வேதாளம்' படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, "வேதாளம்' படம் வெற்றி என்ற செய்தி கிடைத்தது. கடவுளுக்கும் தல ரசிகர்களுக்கும், சினிமாவை நேசிப்பவர்களுக்கும் நன்றி' என்று கூறியுள்ளார்.
இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது, 'உலகம் முழுவதும் வேதாளம்' பிளாக்பஸ்டர் ஹிட் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் எங்கள் இசைக்குழுவின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Hearing from all over the globe that #Vedalam is all set to be a huge blockbuster!Thank you for your love to our team, the movie and music !
— Anirudh Ravichander (@anirudhofficial) November 10, 2015
super happy &thankfull to family audience making vedalam a huge hit,receiving calls from sisters, mothers, from all over the globe sai sai
— siva+director (@directorsiva) November 12, 2015
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments