'சிறுத்தை' படத்தில் நடித்த சிறுமியா இவர்? பிளஸ் 2 படிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுத்தை சிவா இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடிப்பில் உருவான ’சிறுத்தை’ என்ற திரைப்படம் கலந்த 2011 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தில் கார்த்தி மகளாக நடித்திருந்த குழந்தை நட்சத்திரம் ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
’சிறுத்தை’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா என்று தற்போது வரை அழைக்கப்பட்டு வருகிறார். அந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரக்சனா மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’கடல்’ ’ஒகே கண்மணி’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக திரையுலகையிலிருந்து தற்காலிகமாக விலகிய ரக்சனா தற்போது பிளஸ் டூ படித்து வருவதாகவும் தனது கவனம் முழுவதும் படிப்பில் தான் உள்ளது என்றும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் படிப்பு முடிந்தவுடன் தனக்கு நல்ல கேரக்டர் கிடைத்தால் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
‘சிறுத்தை’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறிய போது கார்த்தி மிகவும் மென்மையானவர், மிகவும் எளிமையானவர், அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது பிறந்தநாளுக்கு அவர் பரிசுடன் வீட்டுக்கு வந்ததை என்னால் மறக்கவே முடியாது என்றும் மிகவும் தன்னடக்கம் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.
‘சிறுத்தை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரக்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சிறுத்தை படத்தில் நடித்த சிறுமியா இவர்? என்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com