ஊத்திக்கொடுத்த மலேசிய மாமா.. மாட்டி கொண்ட முத்து.. 'சிறகடிக்க ஆசை'யில் திடீர் திருப்பம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் தற்போது மலேசிய மாமாவுடன் அண்ணாமலை குடும்பத்தினர் அவருடைய சொந்த ஊரில் இருக்கும் காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த நிலையில் மலேசிய மாமாவை தனியாக அழைத்துச் செல்லும் முத்து மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோருடன் மனோஜும் செல்கிறார். ஒரு கட்டத்தில் அனைவரும் சரக்கு அடிக்க ஆரம்பித்தனர். இதனால் தர்ம சங்கடத்திற்கு மனோஜ் உள்ளாகிய நிலையில் மலேசிய மாமா மாப்பிள்ளை மனோஜை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கிறார்.
முன்பின் குடித்து பழக்கம் இல்லாத மனோஜ் போதையில் தள்ளாடி தெருவில் விழுந்து கிடக்கும் நிலையில் அவரை கைத்தாங்கலாக முத்து, செல்வம், மலேசியா மாமா ஆகியோர் வீட்டுக்கு அழைத்து வருகின்றனர். மனோஜ் குடித்திருக்கிறார் என்பதை அறிந்ததும் விஜயா வருத்தப்பட, ரோகிணி ஆவேசப்படுகிறார். அப்போது ’முத்து தான் மனோஜை குடிக்க வைத்திருப்பான் என்று விஜயா வழக்கம் போல் குற்றம் சாட்ட மலேசிய மாமா ’நான் வேண்டாம் என்றுதான் சொன்னேன், முத்துவும் அவருடைய நண்பர்களும் தான் மனோஜை குடிக்க வைத்தார்கள்’ என்று போட்டு கொடுக்கிறார்.
இதனால் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் முத்துவை திட்டுகின்றனர். பாட்டி ஒரு படி மேலே போய் முத்துவை அடிக்கிறார். ’உங்களுக்கு அறிவே இல்லையா என்று ரோகிணியும் திட்டுகிறார். மலேசிய மாமா தான் ஊத்தி கொடுத்த நிலையில் அனைத்து பழியும் முத்துமேல் வந்ததை மீனா புரிந்து கொள்கிறார். ஆனால் வீட்டில் உள்ள மற்றவர்கள் முத்துவை தவறாக நினைக்கின்றனர்.
இந்த நிலையில் முத்து மற்றும் செல்வம் பேசிக் கொண்டிருப்பதை ஒளிந்து இருந்து ரோகிணி கேட்கிறார். இந்த மலேசிய மாமா ஊத்தி கொடுத்துவிட்டு என் மேல் பழி போடுகிறார், அது கூட பரவாயில்லை, இப்போது எனக்கு மிகப்பெரிய சந்தேகம் இவன் உண்மையிலேயே மலேசியா மாமா இல்லை என்பது மட்டுமல்ல, இவன் ரோகினி மாமாவே இல்லை’ என்று கூறுகிறார். இதை சீக்கிரம் நான் நிரூபிக்கிறேன்’ என்று கூற அதைக் கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்
இந்த நிலையில் மலேசியா மாமாவை திட்டும் ரோகிணி ’நாளை காலையில் நீ இந்த இடத்தை விட்டு கிளம்பி விட வேண்டும்’ என்று கூறுகிறார். மலேசிய மாமா உடனே ஊரை விட்டு கிளம்பி விடுவாரா? அல்லது அதற்குள் முத்து அவரது சுயரூபத்தை வெளிப்படுத்துவாரா?என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்..
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments