சிறகடிக்க ஆசை':முத்துவால் மீண்டும் அவமானப்பட்ட மீனா.. ரோகிணி, ஸ்ருதிக்கு அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் முத்து,மீனா, மனோஜ், ரோகிணி, ரவி, ஸ்ருதி மற்றும் அண்ணாமலை, விஜயா ஆகிய எட்டு கேரக்டர்களை வைத்து இந்த சீரியலை குழுவினர் விறுவிறுப்பாக கொண்டு போய் வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ரோகிணி மற்றும் ஸ்ருதி முன் முத்துவால் மீனா அவமானப்பட்டு இருக்கும் காட்சிகள் உள்ளன. ஸ்ருதி அம்மா நேற்று அண்ணாமலை வீட்டிற்கு வந்து சத்தம் போட்டதை அடுத்து அவரை எதிர்த்து முத்து கேள்வி எழுப்பினார். இதனால் அண்ணாமலை அவரை கண்டித்து ஸ்ருதி அம்மாவிடம்ன் மன்னிப்பு கேட்க சொன்னார். ஆனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று வெளியே சென்ற முத்து தனது நண்பர்களுடன் குடிக்கிறார்.
போதையுடன் வீட்டுக்கு வரும் முத்துவை மீனா கண்டிக்கும் நிலையில் திடீரென ரவி மற்றும் முத்து இடையே பிரச்சனை வருகிறது. அப்போது அண்ணாவாலே முத்துக்கு ஆதரவாக பேச முத்து குடித்து விட்டு வந்த சத்தம் போடுகிறார் சுருதி கூற அண்ணாமலை அதிர்ச்சி அடைகிறார்.
முத்து குடித்து விட்டு குடித்துவிட்டு வந்ததை ரோகிணி மற்றும் ஸ்ருதி முன்னிலையில் மீனா அவமானப்பட்டு நிற்கும் காட்சிகள் இன்றைய எபிசோட்டில் உள்ளன. ஆனால் அதே நேரத்தில் தான் மட்டும் குடிகாரன் இல்லை, மனோஜ், ரவி இருவரும் குடிகாரர்கள் தான் என முத்து போட்டு உடைக்க இதனால் ரோகிணி மற்றும் ஸ்ருதி அதிர்ச்சி அடைகின்றனர்.
அதன் பிறகு தனியாக முத்துவை அழைத்துச் செலும் மீனா, ‘உங்களால் நான் இதுவரை பட்ட அவமானம் போதாதா? நீங்கள் என்னதான் நல்லவராக இருந்தாலும் அடுத்தவருக்கு உதவி செய்பவராக இருந்தாலும் குடிகாரன் என்று தான் சொல்வார்கள், இந்த குடிப்பழக்கத்தால் எனக்கு தான் அவமானமாக உள்ளது, என்னை தான் எல்லோரும் குடிகாரன் பொண்டாட்டி என்று திட்டுவார்கள்’ என்று கண்ணீருடன் கூறுகிறார். இதனால் முத்து வருத்தத்துடன் செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
மீனாவுக்கு இனிமேலாவது அவமானம் ஏற்படாத வகையில் முத்து குடியை விடுவாரா? முத்துவின் குடி பிரச்சினை அண்ணாமலை வீட்டில் பெரிய பூகம்பமாக வெடிக்குமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பார்ப்போம்,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com