சிறகடிக்க ஆசை: மீனா-முத்து கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளி.. தொடங்குகிறது மனோஜ்-ரோஹினி பிரச்சனை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த சீரியலில் கடந்த சில மாதங்களாக மீனா மற்றும் முத்து ஆகிய இருவருக்குமே அடுத்தடுத்து கஷ்டங்கள், துன்பங்கள் வந்து கொண்டிருந்தன.
முத்து போலீசிடம் அடி வாங்குவது, காரால் முத்து மீனா இடையே எழுந்த பிரச்சனை, ரவி - ஸ்ருதி திருமணம் காரணமாக மீண்டும் முத்து - மீனா பிரிந்தது, முத்துக்கு திடீரென வேலை இல்லாமல் போனது, மீனாவை வீட்டில் ஒரு வேலைக்காரி போல் நடத்தியது என பல்வேறு சிக்கல்கள் இருவருக்கும் வந்து கொண்டிருந்தன.
ஆனால் தொடர்ச்சியாக தவறு செய்து கொண்டிருக்கும் ரோகிணி மற்றும் மனோஜ் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துக் கொண்டே வந்தனர் இந்த நிலையில் ஒரு வழியாக மீனாவுக்கு முத்து பூக்கடை வைத்துக் கொடுத்து, மீனாவின் வீட்டு வேலை பிரச்சனையை தீர்த்து விட்டார். மேலும் முத்துவும் மீனாவும் தற்போது ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மனோஜ் பிரச்சனை வெளியாகி உள்ளது. மனோஜ் தினமும் வேலைக்கு செல்வதாக பார்க்கில் உட்கார்ந்து பொழுதை கழித்துக் கொண்டிருந்த நிலையில் அதை தனது செல்போனில் படம் பிடித்த முத்து, வீட்டில் உள்ள அனைவரிடம் காட்டி மனோஜ் ஒரு தண்டம் என்பதை முத்து, வீட்டில் உள்ள அனைவரிடமும் போட்டு கொடுத்துவிட்டார். இதனால் மனோஜ் மீது ரோகிணி கோபமாக இருக்கிறார். ஸ்ருதியும் ‘ரோஹினி ஏன் உங்கள் ஹஸ்பண்ட் இப்படி இருக்காரு’ என இளக்காரமாக பேசிவிட்டார். இதனால் ரோஹினி - மனோஜ் இடையே பிரச்சனை வரும் தெரிகிறது.
அதுமட்டுமின்றி அடுத்ததாக விஜயா பெயரில் ரோகிணி வைத்திருந்த பார்லர் விற்கப்பட்டு விட்ட விஷயம், ரோகிணிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ள விஷயம் உள்பட இவர்களது பிரச்சனைகள் தான் அடுத்தடுத்த எபிசோடுகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com