நீயே ஒரு பிராடு, நீ முத்துவ சந்தேகப்படுறியா? 'சிறகடிக்க ஆசை' ரோஹினியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
முத்து ஒரு திருடனாக இருக்க வேண்டும் அல்லது திருடனின் நண்பனாக இருக்க வேண்டும் என்று ரோஹினி சந்தேகப்படும் நிலையில் ’நீயே ஒரு பிராடு, நீ முத்துவை சந்தேகப்படுறியா? என ரசிகர்கள் ‘சிறக்கடிக்க ஆசை’ சீரியல் குறித்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
‘சிறக்கடிக்க ஆசை’ சீரியல் விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் மீனாவின் தம்பி சத்யா முத்துவின் அம்மாவிடம் இருந்து திருடிய ஒரு லட்ச ரூபாயை திருப்பிக் கொடுக்கிறார். இத்துடன் நமக்குள்ள உறவு முடிந்து விட்டது என்றும் இனிமேல் என்னுடைய விஷயத்தில் தலையிடக்கூடாது என்றும் முத்துவிடம் சத்யா கூறுகிறார். இதனால் முத்து ஆத்திரப்பட்டாலும் அவரது எதிர்காலம் குறித்து பயம் கொள்கிறார்.
இந்நிலையில் சத்யா கொடுத்த ஒரு லட்ச ரூபாயை முத்து தனது அப்பாவிடம் கொடுத்து ’திருடன் பிடிபட்டு விட்டான், தனக்கு தெரிந்த போலீசார் இந்த பணத்தை என்னிடம் கொடுத்தார்’ என்றும் கூறுகிறார். அப்போது. ரோஹினி சந்தேகப்பட்டு அது எப்படி போலீசில் புகார் கொடுக்காமலேயே பணம் திரும்பி வரும் என்றும் அதுவும் முழுசாக பணம் எப்படி வரும் என்றும் சந்தேகம் கொள்கிறார்.
இதெல்லாம் நம்ப முடியவில்லை என ரோஹினி கூறிய போது ’நீ உன் மலேசிய மாமாவை கூட்டிக்கொண்டு வந்த போது கூட என்னால் அவரை நம்ப முடியவில்லை என்று பதிலடி கொடுக்கிறார். இருப்பினும் தனது கணவர் மனோஜிடம் ரோஹினி, முத்து குறித்து தனது சந்தேகத்தை கூறுகிறார். கண்டிப்பாக இது போலீஸ்காரர் கொடுத்திருக்க மாட்டார் என்றும், ஒன்று முத்துவே ஆளை வைத்து அந்த பணத்தை திருடி இருக்க வேண்டும் அல்லது திருடன் முத்துவுக்கு நெருக்கமானவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
ஆனால் மனோஜ் தனது தம்பி அப்படிப்பட்டவன் அல்ல என்றும் அவன் முரடன் ஆனால் திருட மாட்டான் என்று கூறுகிறார். அப்போது மனோஜ் மீது ரோகிணி கோபப்படுகிறார். மனோஜ் மற்றும் ரோஹினி பேசுவதை மீனா தற்செயலாக கேட்டு விடுகிறார்.
இந்த நிலையில் நாளைய எபிசோடில் அண்ணாமலை தன் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை மனோஜ் திருடுவது போன்ற காட்சி உள்ளது. இந்த திருட்டு பழியும் முத்து அல்லது மீனா மீது விழுமா? மீண்டும் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுமா? என்பதை இனிவரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com