சிறகடிக்க ஆசை: ரவி-ஸ்ருதி திருமணத்தை நடத்தி வைக்கும் சீதா.. மீனாவுக்கு மீண்டும் பிரச்சனையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது ரவி-ஸ்ருதி திருமணம் குறித்த காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. ஸ்ருதிக்கு அவசர அவசரமாக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து உள்ள நிலையில், உடனடியாக ரவியை திருமணம் செய்ய வேண்டும் என்று ஸ்ருதி கட்டாயப்படுத்துகிறார். ஆனால் ரவி கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி ஸ்ருதியை சமாதானப்படுத்துகிறார். ஆனால் ஸ்ருதி அதிரடியாக ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொள்ள வேண்டும் என்று அவசரப்படுகிறார்.
இந்த நிலையில் முத்து, மீனாவை அழைத்துக் கொண்டு மீனாவின் அம்மாவிடம் சீதாவை ரவிக்கு பெண் கேட்கிறார். ஆனால் மீனாவின் அம்மாவோ பெண் தர முடியாது என்று சொல்கிறார். இந்த நிலையில் ஸ்ருதியை மீண்டும் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்று ரவியை முத்து மிரட்டுகிறார்.
இந்த நிலையில் திடீரென ஸ்ருதி மற்றும் ரவி ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் இந்த திருமணத்திற்கு சாட்சி கையெழுத்தாக ஸ்ருதி சார்பில் சீதாவே கையெழுத்து இட போவதாகவும் அடுத்தடுத்து காட்சிகள் தோன்றுகின்றன. இப்போதுதான் முத்து மற்றும் மீனா ஆகிய இருவரும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், சீதாவால் மீண்டும் இருவருக்கும் சண்டை வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே தன்னுடைய அப்பாவை அவமானப்படுத்தியவர் மகளை திருமணம் செய்யக்கூடாது என்று ரவியை முத்து கண்டித்து உள்ளார் அதேபோல் அண்ணாமலையும் ஸ்ருதி அப்பாவிடம் என்னுடைய மகனால் உங்கள் மகளின் திருமணத்திற்கு பிரச்சினை வராது என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்
இந்த நிலையில் ஸ்ருதி - ரவி திருமணம் நடந்தால் அண்ணாமலையின் கௌரவம் என்ன ஆகும்? என்ற கேள்வி எழுகிறது. மொத்தத்தில் ரவி -ஸ்ருதி திருமணத்தால் அண்ணாமலையின் வீடு, மீனாவின் அம்மா வீடு மற்றும் ஸ்ருதி வீடு என மூன்று வீட்டிலும் குழப்பம் வரும் காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com