சிறகடிக்க ஆசை: சொந்த தொழில் ஆரம்பித்த மீனா.. ஊக்குவிக்கும் முத்து.. எரிச்சலில் விஜயா.. இனி என்ன நடக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பார்வையாளர்கள் மத்தியில் பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியலில் திடீர் திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மீனாவை மருமகள் போல் எண்ணாமல் வீட்டு வேலைக்காரி போலவே கிட்டத்தட்ட அந்த வீட்டில் எல்லோரும் பயன்படுத்தி வரும் நிலையில் திடீரென அவர் சொந்த தொழில் தொடங்கிவிட்டார்.
வீட்டில் துணி துவைக்கும் பிரச்சினை வந்ததை அடுத்து ஸ்ருதி தனது துணிகளை துவைப்பதற்காக மீனாவுக்கு 2000 ரூபாய் சம்பளம் கொடுத்தார். இது மீனாவை மிகவும் மன வருத்தப்படுத்திய நிலையில் அவர் முத்துவிடம் புலம்புகிறார். இதனை அடுத்து முத்து, மீனாவுக்கே தெரியாமல் தனது வீட்டின் அருகில் ஒரு பூக்கடை வைத்து கொடுத்து இன்ப அதிர்ச்சி தருகிறார்
மீனாவும் தற்போது மற்ற இரண்டு மருமகள்கள் போல் சம்பாதிக்க தொடங்கி விட்டதால் இனி வீட்டில் சில திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது. மீனா எந்த வேலையும் செய்யாமல் சும்மாதானே இருக்கிறார், அதனால் தான் வீட்டு வேலையை செய்ய சொல்கிறேன் என்று இதுவரை விஜயா கூறி வந்த நிலையில், தற்போது மீனாவும் பூக்கடை வைத்து விட்டதால் இனி வீட்டு வேலை செய்வது யார்? என்ற கேள்வி எழும்.அதுமட்டுமின்றி 2000 ரூபாய் கொடுத்த ஸ்ருதிக்கு 2500 ரூபாய் முத்து திருப்பி கொடுத்ததும் ஸ்ருதிக்கு கடுப்பை ஏற்றியுள்ளது. தனக்கு போட்டியாக மீனாவும் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டாளே என்று ரோகிணியும் நினைக்க ஆரம்பிக்கிறார். அதுமட்டுமின்றி இந்த வாரம் பாட்டியின் விசிட் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீனாவுக்கு அவர் தனது முழு ஆதரவை கொடுத்து உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி விஜயாவை வெளுத்து வாங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் மீனாவும் இனி சம்பாதிக்கும் ஒரு மருமகள் என்பதால் தனக்குரிய வேலையை மட்டுமே பார்ப்பேன் என்று மீனா போர்க்கொடி தூக்க வாய்ப்பு உள்ளது. அவர் கூறாவிடாலும் அவரது சார்பில் முத்து நிச்சயம் கூறுவார். அப்படி என்றால் சமையல் உள்பட வீட்டு வேலைகளை யார் செய்வது? என்ற கேள்வி எழும்.
மீனா மற்றும் முத்துவை எப்படியாவது வீட்டை விட்டு துரத்த வேண்டும் என்று விஜயா எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் செய்யும் ஒவ்வொரு இடைஞ்சலும் மீனாவுக்கு சாதகமாகவே முடிந்து வருவது விஜயாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. மொத்தத்தில் இனிவரும் எபிசோடுகளில் பல பரபரப்பான திருப்பங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com