'இந்தியன் 2' படம் எனக்கு இதனால தான் கனெக்ட் ஆகலை.. 'சிறகடிக்க ஆசை' முத்து விமர்சனம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை உலக பிரபலங்கள் இந்த படம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து என்ற கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த் இந்த திரைப்படத்தை பார்த்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த படம் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மூன்றாம் பகுதியில் பாகத்தில் ஒரு லீட் வைத்துள்ளார்கள், அந்த படத்தை பார்த்தால் தான் தெரியும்.
மூன்றாம் பாகம் பார்த்தால் தான் இரண்டாம் பாகத்தின் கதை எனக்கு புரியும் என்று நினைக்கிறேன். நாமளே ஊழலில் இருக்கும் ஒரு சிஸ்டம் தான், ஒரு வேலையாக வேண்டும் என்றால் ஐந்து ரூபாய் கூடுதலாக கொடுத்து வேலையை முடிக்கும் நபர்கள் தான் நாம். அப்படி இருக்கும்போது நம்மளை குற்றம் சொல்லும் மாதிரி இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. அந்த விஷயத்தில் தான் எனக்கு இந்த படம் கனெக்ட் ஆகவில்லை.
’இந்தியன் 2’ திரைப்படம் விஷுவல் அளவில் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது, ஆனால் கதையாக பார்க்கும்போது மூன்றாம் பாகத்தை பார்த்தால் தான் இந்த படத்தின் கதை புரியும். இந்த படம் ஒரு ஆரம்பமும் இல்லாமல் முடிவும் இல்லாமல் இருப்பதால் எனக்கு கதை புரியவில்லை. மூன்றாம் பாகத்தின் கனெக்சன் இருப்பதால் அதையும் பார்த்தால் தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்’ என்று குறித்துள்ளார்
மேலும் ஷங்கரை பற்றி எல்லாம் விமர்சனம் செல்லும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை, இந்த படம் குறித்து எனக்கு என்ன தோன்றியதோ அதை நான் கூறியுள்ளேன். ஷங்கர் அவர்கள் பெரிய பெரிய ஜாம்பவான், அவரைப் பற்றி சொல்ல இங்கு யாருக்கும் தகுதியே இல்லை’ என்று தெரிவித்தார்.
மேலும் ஏஆர் ரகுமான், அனிருத் இசை குறித்து கூறிய போது ’இரண்டையும் ஒப்பிடவே கூடாது, அது ஒரு ஜெனரேஷன், இது ஒரு ஜெனரேஷன், ’இந்தியன்’ படத்தின் போது அவர் பயன்படுத்திய இசைக்கருவிகள் வேறு, இப்போது அனிருத் பயன்படுத்திய இசைக்கருவிகள் வேறு, இரண்டையும் ஒப்பிடக்கூடாது என்று வெற்றி வசந்த் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments