'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. க்யூட் வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Monday,October 14 2024]

’சிறகடிக்க ஆசை’ சீரியலின் நாயகன் வெற்றி வசந்த் நிச்சயதார்த்தம் நேற்று நடந்த நிலையில், இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் டிவியில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும், டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சீரியல் முன்னணி இடத்தை ஒவ்வொரு வாரமும் பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற ஹீரோ கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்துக்கு ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர் சீரியல் நடிகை வைஷூ சுந்தர் என்பவரை திருமணம் செய்ய இருப்பதாகவும், விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று வெற்றி வசந்த் மற்றும் வைஷூ சுந்தர் நிச்சயதார்த்தம் நடந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் மோதிரம் மாற்றிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து, சிறகடிக்க ஆசை ரசிகர்கள் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

'கங்குவா' படத்தின் அனைத்து மொழிகளிலும் சூர்யா வாய்ஸ்.. எப்படி தெரியுமா?

சூர்யாவின் 'கங்குவா' திரைப்படம், தமிழ் உட்பட சுமார் 10 மொழிகளில் திரையரங்குகளில்  வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் சூர்யா குரல் திரையில் ஒலிக்க என தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யாவின் 46வது படத்தை இயக்குவது இந்த இயக்குனரா? அப்ப 'வாடிவாசல்' என்ன ஆச்சு?

சூர்யா நடிக்க இருக்கும் 46வது திரைப்படத்தை இயக்கும் இயக்குனர் குறித்த தகவல் கசிந்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'லப்பர் பந்து' நாயகி மீது போலீசார் வழக்குப்பதிவு.. புகார் கொடுத்ததும் ஒரு நடிகை தான்..!

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'லப்பர் பந்து' படத்தின் நாயகி மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த புகாரை அளித்தது ஒரு பிரபல நடிகை என்றும்,

அஜித் மட்டுமல்ல,  கார் ரேசுக்கு தயாராகும் தமிழ் நடிகை.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. குறிப்பாக, ஐரோப்பாவில் நடைபெற இருக்கும் கார்

இந்த வாரம் எலிமினேஷன் யார்? ஜாக்குலின் கணிப்புக்கு விஜய் சேதுபதி பதிலடி..!

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் இந்த வாரமே எலிமினேஷன் உண்டு என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 24 மணி நேர எலிமினேஷன்