'சிறகடிக்க ஆசை' முத்துவுக்கு நிச்சயதார்த்தம்.. சீரியல் நடிகை தான் மணப்பெண்..!

  • IndiaGlitz, [Wednesday,October 09 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த், தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்கள் பெறுகிறது. இந்நிலையில், வெற்றி வசந்த், பொன்னி தொடரின் நாயகி வைஷ்ணவி சுந்தர் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார்.

வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி சுந்தர் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்த நிலையில், இரு வீட்டுப் பெற்றோர்கள் முன்னிலையில் இந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

திருமணம் என்ற புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறோம்; இந்த வாரம் எங்களின் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வெற்றி வசந்த். மேலும் வைஷ்ணவி சுந்தருடன் எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில், அந்த விடியோவுக்கு லைக்ஸ் கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.

More News

ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பிக்பாஸ் வீட்டில் ரணகளம்..!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய மூன்றாவது நாளில் ரவீந்தரை ரஞ்சித் அடிக்க ஆவேசமாக பாய்ந்த காட்சிகள் ப்ரோமோவில் வெளியானதை

தனுஷுடன் மீண்டும் ஒரு திரைப்படம்.. தேசிய விருது பெற்ற பின் உறுதி செய்த நித்யா மேனன்..!

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நித்யா மேனனுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று அந்த விருதை குடியரசு

கமல்ஹாசன் - அன்பறிவ் படத்தின் முக்கிய அறிவிப்பு.. வேற லெவல் வீடியோ ரிலீஸ்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தக்லைப்' என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தகவல்கள் விரைவில்

டின்னு சொல்லாதேன்னா சொல்லாதே.. ஆர்ஜே விஷாலிடம் ஆவேசமான பவித்ரா..

பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரம் அல்லது இரண்டு வாரம் கழித்து விறுவிறுப்பாகும் என்ற நிலையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து விறுவிறுப்பாகி உள்ளது என்பதும்

மாரி செல்வராஜின் 'வாழை'.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வரும் அக்டோபர் 11 முதல், இயக்குனர் மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படமான “வாழை” திரைப்படத்தினை ஸ்ட்ரீம் செய்கிறது !!