'சிறகடிக்க ஆசை' முத்து, மீனாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,October 24 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பள குறித்த தகவல் கசிந்துள்ளது.

இதன்படி, ஹீரோ, ஹீரோயினியாக முத்து மற்றும் மீனா கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா ஆகிய இருவருக்கும் ஒரு எபிசோடுக்கு ₹12,000 சம்பளமாக வழங்கப்படுவதாகவும், இவர்கள்தான் இந்த சீரியலில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் எனவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, முத்துவின் தந்தை சுந்தர்ராஜன் மற்றும் தாயார் அனிலா ஆகியவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு ₹8,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல், மனோஜ் மற்றும் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா மற்றும் சல்மா அருண் ஆகிய இருவருக்கும் ₹6,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம். ரவி மற்றும் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் யோகேஷ் மற்றும் பிரீத்தா ரெட்டி ஆகிய இருவருக்கும் ₹5,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

காமராஜர், பெரியார், அம்பேத்கருக்கு மட்டுமல்ல.. தவெக மாநாட்டில் இன்னும் சில கட்-அவுட்டுக்கள்..!

நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டிற்கான பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் திடீர் திருப்பம்.. ஆண்கள், பெண்கள் இணைந்த கூட்டணி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 18 வது ஒளிபரப்பாக இருக்கும் நிலையில், இந்த வாரம் போட்டியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது.

'மெய்யழகன்' உள்பட 5 தமிழ்ப்படங்கள்.. இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன

ராகு கேது பிரச்சனைக்கு வழிபடவேண்டிய அம்மன் : நடிகர் அனுமோகன்

பிரபல நடிகர் அனுமோகன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

'இதுதான் இந்திய ராணுவத்தின் முகம்': சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலர்..!

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.