'சிறகடிக்க ஆசை' முத்து, மீனாவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" சீரியல் ஒவ்வொரு வாரமும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்களின் சம்பள குறித்த தகவல் கசிந்துள்ளது.
இதன்படி, ஹீரோ, ஹீரோயினியாக முத்து மற்றும் மீனா கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா ஆகிய இருவருக்கும் ஒரு எபிசோடுக்கு ₹12,000 சம்பளமாக வழங்கப்படுவதாகவும், இவர்கள்தான் இந்த சீரியலில் அதிக சம்பளம் பெறும் நடிகர்கள் எனவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, முத்துவின் தந்தை சுந்தர்ராஜன் மற்றும் தாயார் அனிலா ஆகியவர்களுக்கு ஒரு எபிசோடுக்கு ₹8,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம். அதேபோல், மனோஜ் மற்றும் ரோகிணி கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா மற்றும் சல்மா அருண் ஆகிய இருவருக்கும் ₹6,000 சம்பளமாக வழங்கப்படுகிறதாம். ரவி மற்றும் ஸ்ருதி கேரக்டரில் நடிக்கும் யோகேஷ் மற்றும் பிரீத்தா ரெட்டி ஆகிய இருவருக்கும் ₹5,000 சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே "சிறகடிக்க ஆசை" சீரியலில் நடிக்கும் நடிகர்களுக்கே அதிக சம்பளம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments