விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்..! 'சிறகடிக்க ஆசை' 2 மணி நேர எபிசோடில் இவ்வளவு நடந்துருக்கா..
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இரண்டு மணி நேரம் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த எபிசோடில் பல்வேறு திருப்பங்களுடன் மனோஜ் விஜயாவுக்கு ஆப்பு வைத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இன்றைய எபிசோடில் 4 லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கிய நபர் ஏமாற்றுக்காரர் என்பதும் அந்த நபர்களே விஜிலென்ஸ் அதிகாரிகள் போன்ற போலி நபர்களை அனுப்பி மனோஜிடம் இருந்து 4 லட்ச ரூபாயை பறித்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்றபோதுதான் இந்த உண்மை மனோஜ்க்கு தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்து தன்னுடைய அம்மாவின் காலில் விழுந்து கதறி அழுகிறார்.
எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள், நான்கு லட்சம் ரூபாயை தயார் செய்யுங்கள் என்று அம்மா விஜயாவிடம் மனோஜ் கூற அப்போது விஜயா வேறு வழியின்றி மீனா கொடுத்த நகைகளை கொடுக்கிறார். அந்த நகைகளை அடகு வைத்து இப்போதைக்கு சமாளித்து கொள் என்று விஜயா கூற, மனோஜ் நகைக்கடைக்கு சென்ற போது நான்கு லட்சம் ரூபாய்க்கு இந்த நகைகளை அடகு வைக்க முடியாது, வேண்டுமானால் விற்று விடுங்கள் என்று சொல்ல, கொஞ்சம் கூட யோசிக்காமல் மனோஜ் அந்த நகைகளை விற்று விடுகிறார்.
இந்த நிலையில் மனோஜ் ஒரு லட்ச ரூபாய் ஒரே நாளில் சம்பாதித்து சம்பாதித்து விட்டதாக அனைவர் முன்னிலையிலும் ரோகிணி தம்பட்டம் அடிக்க, விஜயா தர்மசங்கடமாக மனோஜை பாராட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் திணறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன
இதனை அடுத்து ஊரில் இருந்து பாட்டி தனது 80 வது பிறந்த நாளை கொண்டாட வருவதாக கூற பாட்டிக்கு ஏதாவது கிப்ட் தர வேண்டும் என்பதற்காக முத்து மற்றும் மீனா முடிவு செய்கின்றனர். ஆனால் பணம் இல்லையே என்ற நிலையில் மீனா அம்மாவிடம் கொடுத்த நகைகளை வாங்கி கொடுங்கள், பாட்டிக்கு நகை செய்ய வேண்டும் என்று முத்து அண்ணாமலையிடம் கூறுகிறார்.
இந்த விஷயம் தெரிந்த மனோஜ் தனது அம்மாவிடம் சென்று ’முத்து நகையை கேட்கிறான், ஏதாவது செய்யுங்கள் என்று சொல்ல, நான் என் நகைகளை தருகிறேன், அதை அடகு வைத்துவிட்டு, மீனா நகைகளை திருப்பிக் கொண்டு வா’ என்று விஜயா சொல்கிறார்.
அப்போது தான் மனோஜ், ‘நான் நகைகளை அடகு வைக்கவில்லை, விற்று விட்டேன் என்று சொல்லும் போது விஜயா அதிர்ச்சி அடைகிறார். இப்போது நான் என்ன செய்வேன் என்று விஜயா புலம்பி கொண்டிருப்பதோடு இன்றைய இரண்டு மணி நேரம் எபிசோடு முடிவடைகிறது,.
நாளைய எபிசோட் புரமோவில் விஜயா தங்களிடம் கொடுத்த நகை, கவரிங் என்று முத்து மற்றும் மீனாவுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் முத்து தனது அப்பா அண்ணாமலைக்கு போன் செய்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments