சிறகடிக்க ஆசை: பொறுத்து பொறுத்து பார்த்த முத்து.. உண்மையை உடைக்க இருப்பதால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக தற்போது சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் இதுவரை அடக்கி வைத்திருந்த உண்மையை முத்து உடைக்கும் காட்சிகள் உள்ளன.
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தம்பி சத்யா செய்த தவறை கண்டுபிடித்த முத்து அவரது கையை உடைத்து விடுகிறார். ஆனால் சத்யாவை குடிபோதையில் அடித்து விட்டதாக கோபப்படும் மீனா அவரை அண்ணாமலையிடம் குற்றம் சாட்டுகிறார்.
மீனாவுக்கு சத்யா குறித்த உண்மை தெரிய வேண்டாம் என்று பொறுத்து பொறுத்து முத்து சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் அவர் தனது பொறுமையை இழந்து உண்மையை அண்ணாமலையிடம் கூறும் காட்சிகள் இன்றைய எபிசோடின் இறுதியில் உள்ளது. மொத்தத்தில் இனிவரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அண்ணாமலை சத்யாவின் வீட்டுக்கு சென்று அவரை நலம் விசாரிக்கும் போது ’முத்து எப்போதுமே நியாயமாக தான் நடந்து கொள்வான், ஒரு பெரிய காரணம் இல்லாமல் அவன் அடிக்க மாட்டான்’ என்று கூறினார். இருப்பினும் அவர் சத்யாவின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்புகிறார்.
இந்த நிலையில் தனது தம்பியை அடித்து விட்டதாக முத்து மீது கோபமாக இருக்கும் மீனா, அண்ணாமலையிடம் கூற இருக்கும் உண்மையை ஒளிந்து இருந்து பார்ப்பது போன்ற காட்சிகள் இருப்பதால் மீனாவும் முத்து ஏன் தம்பியை அடித்தார் என்பதை புரிந்து கொள்வார் என்றும் அதன்பின் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com