கணவருடன் தனிக்குடித்தனம் செல்கிறாரா ரோகிணி? விஜயா அதிர்ச்சி.. 'சிறகடிக்க ஆசை' அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான ’சிறக்கடிக்க ஆசை’ என்ற சீரியல் மிகக் குறுகிய நாட்களில் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டது. குறிப்பாக முத்து, மீனா ஆகிய இருவரது நடிப்புக்கு பலர் அடிமை ஆகிவிட்டனர். இதுவரை சீரியலே பார்க்காதவர்கள் கூட இந்த ஒரு சீரியலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
ஆர் சுந்தர்ராஜன் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த சீரியலில் முத்து கேரக்டரில் வெற்றி வசந்த் மற்றும் மீனா கேரக்டரில் கோமதி பிரியா நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியலில் ஆடி அழைப்புக்கு மீனாவை அவரது அம்மா அழைத்துச் சென்று விட்ட நிலையில் முத்து மற்றும் அவரது அண்ணன் மனோஜ் ஆகிய இருவருக்கும் சண்டை வருவதாகவும் இதனால் முத்துவுடன் சண்டை போடும் மனோஜின் மனைவி ரோகினி தனது கணவருடன் தனிக்குடித்தனம் செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தன்னுடைய வீட்டு பத்திரத்தை வைத்து ரோகிணியின் பியூட்டி பார்லருக்கு கடன் வாங்கி கொடுத்துள்ள விஜயா இதனால் அதிர்ச்சி அடைவதாகவும், ரோகிணி தனிக்குடித்தனம் சென்று விட்டால் பணத்தை எப்படி வாங்குவது என்ற அதிர்ச்சியில் இருப்பதாகவும் கதை செல்வதாக கூறப்படுகிறது.
ரோகிணி தனது கணவருடன் தனிக்குடித்தனம் செல்வாரா? சமைக்க தெரியாத இருவரும் மீனாவின் ருசியான சாப்பாட்டை சாப்பிட்டு பழகிய நிலையில் தனிக்குடித்தனம் சென்றால் சாப்பாடு பிரச்சனை வருமா? கடனை அடைக்க தேவையான பணத்திற்கு என்ன செய்வார்கள்? உட்பட கதையில் என்னென்ன ட்விஸ்ட் இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குரு சம்பத்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த சீரியல் தற்போது 175 எபிசோடுகள் முடிந்துள்ள நிலையில் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments