சிறகடிக்க ஆசை: முத்து குடும்பத்தில் இன்னொரு சிக்கல்..  சுருதியால் மீனாவுக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்..!

  • IndiaGlitz, [Friday,October 06 2023]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறுகிய காலத்திலேயே இந்த சீரியல் டாப் 10 டிஆர்பியில் வந்துவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில், விஜயா திடீரென ரோகிணியின் பார்லருக்கு செல்லும்போது அவர் வருவதால் அவசர அவசரமாக பார்லர் போர்டை துணி வைத்து மறைக்கிறார்கள். அதன்பின் விஜயாவை ஒரு வழியாக சமாளித்து அவருடன் ரோகிணி வீட்டுக்கு செல்கிறார்.

இந்த நிலையில் ரவி தன்னை உடனே திருமணம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் சுருதி தனது வீட்டில் மாப்பிள்ளை பார்த்து விட்டார்கள் என்றும், இனி மேலும் பொறுக்க முடியாது என்றும் வாக்குவாதம் செய்கிறார். ஆனால் ரவி உடனே திருமணம் செய்ய முடியாது என்று கூறியதால் அவர் மீனாவிடம் சென்று தனது காதலை தெரிவிக்கிறார்

ரவியுடனான காதல் குறித்து சுருதி கூறியதும் அதிர்ச்சி அடையும் மீனா, ‘கொஞ்சம் பொறுமையாக இருங்கள், நான் என் கணவரிடமும் ரவியுடனும் பேசுகிறேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். இதனை அடுத்து மீனா, முத்துவிடம் சுருதி - ரவி காதல் குறித்து கூறுகிறார். இதனால் ஆத்திரம் அடையும் முத்து ஏற்கனவே அந்த வீட்டுப் பெண் வேண்டாம் என்று ரவியிடம் தெரிவித்தேன், அதையும் மீறி காதலிக்கின்றானா? என்று ஆத்திரமடைகிறார்.

இந்த நிலையில் சுருதிக்கு அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துவிட இனிமேல் அவர்தான் உனக்கு வருங்கால கணவர் அவர்தான் என கண்டிப்புடன் கூறுகிறார்கள், மேலும் இனி டப்பிங் எல்லாம் செல்ல வேண்டாம், வீட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கின்றனர். இதனால் சுருதி அதிர்ச்சி அடைகிறார்

இந்த நிலையில் எதற்கெடுத்தாலும் தடாலடி முடிவெடுக்கும் முத்து, மீனாவின் அம்மாவிடம் சென்று தனது தம்பி ரவிக்கு உங்கள் இரண்டாவது பெண் சீதாவை திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன் என்று கூற மீனாவும், அவரது அம்மாவும் அதிர்ச்சி அடைகின்றனர். ஒரே எபிசோடில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த திருப்பங்களின் முடிவு என்ன என்பதை அடுத்தடுத்து எபிசோடுகளில் தான் தெரிய வரும்.