பணத்தை மொத்தமாக ஏமாந்து நிற்கும் மனோஜ்.. ஞாயிறு அன்று 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் 'சிறகடிக்க ஆசை' ப்ரோமோ ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் வரும் ஞாயிறு அன்று இரண்டு மணி நேரம் ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாளை 4:30 மணி 6:30 மணி வரை ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எபிசோடுக்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் மனோஜிடம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கி, கள்ள நோட்டு கொடுத்து ஒருவர் ஏமாற்றி விட, அதனால் அதிர்ச்சி அடையும் மனோஜ் தனது அம்மாவிடம் உண்மையைச் சொல்லி நகையை கொடுங்கள், இல்லாவிட்டால் பெரிய சிக்கல் ஆகிவிடும் என்று கூறுகிறார்.
இதனை அடுத்து மீனா கொடுத்த நகைகள் தான் என்னிடம் இருக்கிறது என்று கூறி அந்த நகையை மனோஜிடம் விஜயா கொடுக்க மனோஜ் அந்த நகையை அடகு வைக்க செல்கிறார். ஆனால் அடகு கடைக்காரர் 4 லட்ச ரூபாய் இதற்கு கிடைக்காது, விற்பனை செய்வதாக இருந்தால் சொல், 4 லட்சம் தருகிறேன் என்று சொல்ல, அந்த நகைகளை மனோஜ் விற்று விடுகிறார்.
இந்த நிலையில் ’மீனா எப்போவாவது நகையே கேட்டால் என் மானம் போய்விடும், சீக்கிரம் அந்த நகைகளை திருப்பிக் கொடு’ என்று விஜயா சொல்லும் போது, ’அந்த நகைகளை விற்று விட்டேன்’ என்று மனோஜ் கூற, அதற்கு விஜயா அதிர்ச்சி அடைவதுடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் இந்த இரண்டு மணி நேர எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com