17 லட்சத்தை தூக்கி எறிந்த ரோகிணி .. வளையலால் மீண்டும் சிக்கிய விஜயா.. விறுவிறுப்பில் 'சிறகடிக்க ஆசை'
Send us your feedback to audioarticles@vaarta.com
வீட்டு பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கிய பணத்தை, குடும்பத்தினர் முன்னிலையில் ரோகிணி தூக்கி எறிய அப்போது அந்த பணத்தை பைனான்சியரிடம் கொடுக்கச் சென்றபோது வளையலை விஜயா அடகு வைத்தது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டை அடமானம் வைத்து தான் ரோகிணி பார்லர் வைத்தார் என்பது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்து விட்ட நிலையில் வேறு வழியின்றி ரோகிணி பார்லரை விற்று 12 லட்ச ரூபாய் புரட்டுகிறார்.
இதனை அடுத்து நகைகளை விற்று 3 லட்சம் என 15 லட்சம் சேர்த்த நிலையில் மீதி 2 லட்சத்தை அவர் இன்னொருவரிடம் வட்டிக்கு வாங்குகிறார். அவர் வட்டிக்கு வாங்கியதை மீனாவின் தம்பி பார்த்து விடும் காட்சியும் உள்ளது.
இந்த நிலையில் 17 லட்சம் மற்றும் வட்டியுடன் சேர்த்து வீட்டினர் அனைவரும் முன் ரோகிணி கொடுக்க இந்த பணத்தை தனது அப்பாவிடம் வாங்கியதாக பொய் சொல்கிறார். அப்போது நீதான் என் மருமகள் என விஜயா மெச்சிய நிலையில் அந்த பணத்துடன் குடும்பத்தினர் அனைவரும் பைனான்சியரிடம் சென்று பத்திரத்தை வாங்க செல்கின்றனர்.
அப்போது பணத்தை வாங்கிவிட்டு பத்திரத்தை திருப்பி கொடுக்கும் பைனான்சியர் கடைசியாக விஜயா அடகு வைத்த வளையலையும் கொடுக்கிறார். அந்த வளையலை பார்த்ததும் அதிர்ச்சி அடையும் அண்ணாமலை, ‘இது என்னுடைய அம்மாவின் வளையல் ஆச்சே, இது எப்படி இங்கே வந்தது’ என்று கூறுகிறார். இது குறித்த பிரச்சனை நாளைய எபிசோடில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், திருப்பத்துடனும் சென்று வருகிறது என்பதால் பார்வையாளர்கள் இந்த சீரியலை மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
Siragadikka Aasai | Episode Promo | 25th September 2023 pic.twitter.com/fJJRKsOE73
— Vijay Television (@vijaytelevision) September 25, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments