ஒரே வாரத்தில் 6 இடங்கள் முன்னேறிய 'சிறகடிக்க ஆசை'.. இந்த வார டிஆர்பி ரேட்டிங் தகவல்கள்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகியவற்றில் சீரியல்கள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் ஏழாவது இடத்தில் இருந்த ’சிறகடிக்க ஆசை’ சீரியல் இந்த வாரம் 6 இடங்கள் முன்னேறி இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடந்த வாரம் முதல் இடத்தில் இருந்த சன் டிவியின் ’சிங்கப்பெண்ணே’ தொடர் இந்த வாரமும் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. ஒரு சில டெக்னிக்கல் பிரச்சினைகளால் கடந்த வாரம் ஏழாவது இடத்திற்கு சென்ற ’சிறகடிக்க ஆசை’ சீரியல் இந்த வாரம் மீண்டும் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதும் அடுத்த வாரம் முதல் இடத்தை பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதை போல் சென்ற வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த சன் டிவியின் ’கயல்’ சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்தில் உள்ளது. மேலும் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்ட ’வானத்தைப்போல’ தொடர் கடந்த வாரம் நிறைவடைந்த நிலையில் இந்த சீரியல் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் கடந்த வாரம் மூன்றாவது இடத்தில் இருந்த ’மருமகள்’ தொடர் இந்த வாரம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இனி அடுத்த வாரம் இந்த சீரியல்கள் எந்தெந்த இடத்தை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

இன்றுடன் முடிவடைந்த 'ஹார்ட்பீட்' வெப் தொடர்.. ஆனால் உடனே வெளியான நல்ல செய்தி..!

ஹாட் ஸ்டாரில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த 'ஹார்ட் பீட்' என்ற வெப் தொட இன்றுடன் முடிவடைந்த நிலையில் இன்னொரு நல்ல செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முருகன் விரதம்: 48 நாட்களில் உங்கள் பிரார்த்தனை நிறைவேற! விஜய் குமார் சொன்ன ரகசியங்கள்

முருகன் விரதம்: 48 நாட்களில் உங்கள் பிரார்த்தனை நிறைவேற! விஜய் குமார் சொன்ன ரகசியங்கள்

'சூரரை போற்று' மாறா கனவை சொந்த வாழ்வில் நிறைவேற்றிய சூர்யா.. குவியும் வாழ்த்துக்கள்..!

'சூரரை போற்று' திரைப்படத்தில் மாறா என்ற கேரக்டரில் நடித்திருந்த சூர்யாவுக்கு ஒரு விமானம் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்த நிலையில் தற்போது சூர்யா தனது சொந்த வாழ்வில் விமானம் வாங்கி இருப்பதாக

விஜய் மீது தேச குற்ற வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்..!

விஜய் நேற்று அறிமுகம் செய்த கொடியில் சர்ச்சைக்குரிய அம்சங்கள் இருப்பதால் அவர் மீது தேச குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்

தனுஷின் 'ராயன்' உள்பட இன்று என்னென்ன படங்கள் ஓடிடியில்? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில்