7வது இடத்திற்கு தள்ளப்பட்ட 'சிறகடிக்க ஆசை'.. டிஆர்பியில் டாப் 6 இடங்களில் சன் டிவி தொடர்.!

  • IndiaGlitz, [Saturday,August 17 2024]

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் குறித்த டிஆர்பி ரேட்டிங் ஒவ்வொரு வாரமும் வெளியாகி கொண்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் இருந்த நிலையில் இந்த வாரம் அந்த சீரியல் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களாக இரண்டாவது இடத்தில் இருந்த ’சிங்கப்பெண்ணே’ சீரியல் இந்த வாரம் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் ’கயல்’ சீரியல் உள்ளது.

மூன்றாவது இடத்தில் ’மருமகள்’ நான்காவது இடத்தில் ’வானத்தைப்போல’ ஐந்தாவது இடத்தில் ’சுந்தரி’ மற்றும் ஆறாவது இடத்தில் ’மல்லி’ ஆகிய தொடர்கள் உள்ளன. இதனை அடுத்து ஏழாவது இடத்தில் தான் விஜய் டிவியின் ’சிறகடிக்க ஆசை’ உள்ளது.

எட்டாவது இடத்தில் ’பாக்கியலட்சுமி’ ஒன்பதாவது இடத்தில் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ மற்றும் பத்தாவது இடத்தில் ’ராமாயணம்’ ஆகிய சீரியல்கள் உள்ளன. இந்த வாரம் முதல் ஆறு இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்து விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

'கனா காணும் காலங்கள்' சீசன் 3.. ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீமாகும் தேதி அறிவிப்பு..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான  "கனா காணும் காலங்கள்" சீரிஸின் மூன்றாவது

என் வாழ்க்கையை மாற்றிய முருகன்! - Singer Velmurugan

பிரபல பாடகர் வேல்முருகன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் அளித்த பேட்டியில், தனது ஆழ்ந்த ஆன்மீக வாழ்க்கை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார்.

'மழை பிடிக்காத மனிதன்', 'ராயன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் 'மழை பிடிக்காத மனிதன்' திரைப்படம் திடீரென இன்று ஓடிடியில் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வார ஓடிடி ரிலீஸ் தகவல்கள்.. தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

இந்த வாரம் இரண்டு தமிழ் படங்கள் மற்றும் இரண்டு வெப் தொடர்கள் வெளியாக இருப்பதை அடுத்து தமிழ் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக கருதப்படுகிறது.

'விடாமுயற்சி' அப்டேட் கொடுத்த சுரேஷ் சந்திரா.. அஜித் ரசிகர்கள் ஏமாற்றம்..!

அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் அப்டேட்டை சுரேஷ் சந்திரா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த அப்டேட்டை பார்த்து அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.