அண்ணாமலை அப்பாவிற்கு திருமண நாள் வாழ்த்துக்கள்: 'சிறகடிக்க ஆசை' நடிகர் வெளியிட்ட வீடியோ..!
- IndiaGlitz, [Tuesday,March 05 2024]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் அப்பாவாக நடித்து வரும் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜனின் திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் இந்த சீரியலில் நடித்த நடிகர், இந்த திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரை உலகில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் . இவரது முதல் படமான ’பயணங்கள் முடிவதில்லை’ என்ற படம் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தெரிந்தது. அதன் பிறகு ’வைதேகி காத்திருந்தாள்’ ’குங்குமச்சிமிழ்’ ’அம்மன் கோவில் கிழக்காலே’ ’மெல்ல திறந்தது கதவு’ ’ராஜாதி ராஜா’ ’திருமதி பழனிச்சாமி’ உள்ளிட்ட பல படங்களை அவர் இயக்கி உள்ளார் என்பதும் அது மட்டும் இன்றி ஏராளமான படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 74 வயதாகும் சுந்தர்ராஜன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் ஹீரோ முத்துவின் அப்பாவாக நடித்து வருகிறார் என்பதும் அவரது கேரக்டர் ரசிகர்கள் மனதில் நிற்கும் வகையில் சூப்பர் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர் சுந்தரராஜன் கடந்த 1974 ஆம் ஆண்டு ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு அசோக், கார்த்திக், தீபக் ஆகிய மூன்று மகன்கள் இருந்தனர். ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு கார்த்திக் எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் பலியானார். அசோக், தீபக் ஆகிய இருவரும் திரையுலகில் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆர் சுந்தர்ராஜன் தனது மனைவியுடன் இன்று திருமண நாள் கொண்டாடிய நிலையில் இது குறித்த வீடியோவை ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்துவின் நண்பனாக நடித்து வரும் பழனியப்பன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சுந்தர்ராஜன் மற்றும் அவரது மனைவி இருவரும் கேக் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி விடும் க்யூட் காட்சிகள் இந்த வீடியோவில் உள்ளதை அடுத்து ஏராளமானோர் இந்த வீடியோவுக்கு லைக் பதிவு செய்து வருகின்றனர்.