'சிறகடிக்க ஆசை' மலேசியா மாமா 40 சீரியல் இயக்கி உள்ளாரா? 70 வயதிலும் பிசி..!

  • IndiaGlitz, [Thursday,May 23 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மலேசியா மாமா கேரக்டரில் நடித்தவர், 40 சீரியல் இயக்கி இருப்பதாகவும் பல சீரியலில் ஸ்கிரிப்ட் எழுதி உள்ளதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் கிட்டத்தட்ட வில்லி கேரக்டரில் நடிக்கும் ரோகிணியின் செட்டப் மலேசியா மாமாவாக நடித்திருப்பவர் நடிகர் ஜெயமணி. இவர் ஏற்கனவே ’திருமதி செல்வம்’ என்ற தொடரில் பூங்காவனம் என்ற கேரக்டரில் நடித்தார் என்பதும் அந்த சீரியலுக்கு பிறகு அவரை பூங்காவனம் என்று பலர் அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் மலேசியா மாமா கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது அவரை எல்லோரும் மலேசிய மாமா என்று கூப்பிடுவதால் மிகுந்த சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

70 வயதான ஜெயமணி சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பாக ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் ’சொர்க்கவாசல்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் ஏற்கனவே 40 சீரியல் இயக்கி உள்ளதாகவும் அது மட்டும் இன்றி கிரியேட்டிவ் பணிகள், ஸ்கிரிப்ட் பணிகளும் செய்து இருப்பதாகவும், அதனால் இயக்குனர் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை என்னால் புரிந்து கொண்டு கேரக்டரை என்னால் உள்வாங்கிக் கொண்டு எளிதில் நடிக்க முடிகிறது என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜெயமணி மனைவி ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட் என்றும் இவரது ஒரே மகள் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு ஜூன் ஒன்றாம் தேதி திருமணம் என்ற நல்ல தகவலையும் தெரிவித்துள்ளார்.

70 வயதிலும் சினிமா, சீரியல் என பிசியாக இருக்கும் ஜெயமணி விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும் அது குறித்து அறிவிப்பை இன்னும் சில நாட்களில் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

More News

வரும் தீபாவளிக்கு 5 பிரபலங்களின் படங்கள் ரிலீஸா? எந்தெந்த படங்கள் பின்வாங்கும்?

2024 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் ஐந்து பிரபலங்களின் திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதில் சில படங்கள் பின்வாங்குமா? அல்லது ஐந்துமே தீபாவளி

4 நாட்கள் டான்ஸ் ரிகர்சல் பார்த்த த்ரிஷா.. எந்த படத்திற்காக? வைரல் வீடியோ..!

நடிகை த்ரிஷா தான் நடித்து வரும் திரைப்படத்திற்காக நான்கு நாட்கள் டான்ஸ் ரிகர்சல் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்திருப்பதை அடுத்து அந்த புகைப்படங்கள்

ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதி.. ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் என்ற பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும்

பதிப்புரிமை விவகாரம்: 'மஞ்சும்மெல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ்..!

சமீபத்தில் வெளியான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் தனது 'குணா' படத்தின் பாடலை பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜா அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி

தற்போது பெண்ணியம் பற்றிய புரிதல் தவறா இருக்குன்னு நினைக்கிறன்

என்னை டான்சர் என்று சொல்லவே எனக்கு Guilt-அ இருக்கும்.மேலும் நான் என் வாழ்க்கையில் பெரிதாக ஒன்றும் பிளான் பண்ணிலாம் போகறரது இல்லை.அது போகும் போக்கிலேயே சென்று விடுகிறேன்...