திரைப்படத்தில் நடிக்கிறாரா 'சிறகடிக்க ஆசை' நடிகர்? முத்துவுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு..!

  • IndiaGlitz, [Thursday,January 11 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’என்ற சீரியல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் அனைவருமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முத்து -மீனா, மனோஜ் - ரோகிணி, ரவி - ஸ்ருதி மற்றும் அண்ணாமலை - விஜயா ஆகிய நான்கு ஜோடிகள் தான் இந்த சீரியலின் முக்கிய கேரக்டர்கள். இந்த எட்டு கேரக்டர்களை வைத்து மிகவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் சீரியல் சென்று கொண்டிருக்கிறது என்பதால் அனைவர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த நிலையில் அண்ணாமலை - விஜயா தம்பதியின் மூத்த மகனான மனோஜ் என்ற கேரக்டரில் நடிப்பவர் ஸ்ரீதேவா. இவரது நடிப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் பிரபல இயக்குனர் நந்தா பெரியசாமி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோவில் அவர் நந்தா பெரியசாமி தனது நல விரும்பி என்று தெரிவித்துள்ளதை அடுத்து அவரது அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’சிறகடிக்க ஆசை’ சீரியலின் நாயகன் முத்துவுக்கே இன்னும் சினிமா வாய்ப்பு கிடைக்காத நிலையில் மனோஜ்க்கு சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

More News

கமல்ஹாசனின் 'தக்ஃலைப்' படத்தில் இணைந்த 2 பிரபலங்கள்:ராஜ்கமல் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'தக்ஃலைப்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் இணைந்தனர் என்பதை

 9ஸ்கின் புரமோஷன் நிகழ்ச்சியில் கண்கலங்கிய நயன்தாரா.. விக்னேஷ் சிவன் தான் காரணமா?

நடிகை நயன்தாரா 9ஸ்கின் என்ற சரும பராமரிப்பு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் சேலத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் குறித்து பேசும் போது அவர் மேடையில்

6 போட்டியாளர்களையும் தனி அறையில் வைத்து பூட்டிய பிக்பாஸ்.. கதவு திறந்ததா? இல்லையா?

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில் திடீரென பிக் பாஸ் 6 போட்டியாளர்களையும் தனித்தனி அறைக்கு  செல்லுமாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த் மகனுக்கு இந்த உதவியை செய்ய தயார்: ராகவா லாரன்ஸ் வீடியோ வைரல்..!

விஜயகாந்த் சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற  நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் அவருடைய மகனுக்கு உதவி செய்ய தயார் என்று வீடியோ ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் - எச்.வினோத் திரைப்படம் டிராப்பா? என்ன காரணம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாகவும் கமல்ஹாசனின் 233 வது திரைப்படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்