சிறகடிக்க ஆசை: இதே கேள்வியை முத்து திருப்பி கேட்டால் என்ன ஆகும்? ரோகிணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் சில திருப்பங்கள் ஏற்பட்டு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நண்பர்களின் கார்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக முத்து தனது சொந்த காரை விற்று அதில் உள்ள பணத்தை நண்பர்களுக்காக செலவு செய்து விட்டார். இந்த விஷயத்தை அவர் வீட்டில் கூட சொல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது அவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

முத்துவின் நண்பன் செல்வம் இதுகுறித்து கேட்டபோது கூட வீட்டில் எதையாவது சொல்லி சமாளித்துக் கொள்ளலாம், அதுவரை தெரியாமல் இருக்கட்டும், கார் ஷெட்டில் இருக்கிறது என்று கூறி சமாளித்து விடலாம் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் முத்து ஆட்டோ ஓட்டியதை ரோகிணி பார்த்து விட, அவர் வீட்டில் போய் பத்த வைத்து விட்டார்.

இதனால் ஆவேசமான விஜயா ’வீட்டை அடமானம் வைத்துதானே உனக்கு கார் வாங்கி கொடுத்தோம், நீ காரை விற்றால் அந்த பணத்தை வீட்டில் தானே கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார். உடனே முத்து ’வீட்டில் இருந்த 27 லட்ச ரூபாய் பணத்தை தானே மனோஜ் திருடி கொண்டு சென்றான், அந்த பணத்தை கொடுக்க சொல்லுங்கள், அடுத்த நிமிடமே நான் காருக்கான பணத்தை கொடுத்து விடுகிறேன்’ என்று பதிலடி கொடுக்கிறார்.

இந்த நிலையில் இந்த சீரியல் குறித்து பார்வையாளர்கள் ரோகிணி கேரக்டரை சரமாரியாக திட்டி வருகின்றனர். நீயே பார்லரை விற்றுவிட்டு அதில் வேலை பார்க்கும் ஒரு ஸ்டாப்பாக இருக்கும்போது நீ முத்துவை போய் காரை விற்று விட்டதாக பத்தவைத்து உள்ளாயே? நீ பார்லரை விற்றது முத்துவுக்கு தெரிந்தும், அதை மரியாதை காரணமாக சொல்லாமல் இருக்கிறார். ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் முத்து காரை விற்றதை போட்டுக் கொடுத்திருக்கிறாய்.

நீ சொன்னது போல் முத்துவும் திருப்பி நீ பார்லரை விற்று விட்ட விஷயத்தை வீட்டில் சொல்லி இருந்தால் என்ன நடக்கும்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இனி அடுத்த அடுத்த எபிசோடுகளில் ரோகிணி பார்லரை விற்றதையும் முத்து வீட்டில் போட்டு உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.