'சிறகடிக்க ஆசை': மலேசிய மாமாவை அடுத்து அடுத்த இடி.. முத்து கண்டுபிடித்த உண்மையால் ரோகிணி அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறக்கடிக்க ஆசை’ என்ற சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அண்ணாமலை தனது மூன்று மகன்கள் மற்றும் மருமகள்களுடன் தனது சொந்த ஊருக்கு சென்ற காட்சிகள் இருந்தன என்பதும் அங்கு ரோகினி மாமா என்று கூறிக்கொண்டு வந்த மலேசியா மாமாவும் வந்து கலகலப்பை ஏற்படுத்தினார் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் ஒரு வழியாக தற்போது கிராமத்திலிருந்து வீட்டிற்கு அண்ணாமலை குடும்பத்தினர் திரும்பி உள்ளனர். வீட்டிற்கு வந்த அடுத்த நிமிடமே விஜயா வழக்கம்போல் தனது அதிகாரத்தை மீனாவின் மீது செலுத்த ஆரம்பித்து விட்டார்.
இந்த நிலையில் மலேசிய மாமா பிரச்சனையை ஒரு வழியாக சமாளித்து முடித்த ரோகிணிக்கு தற்போது மீண்டும் ஒரு சிக்கல் வந்துள்ளது. ரோகிணி விஜயாவின் பெயரில் ஒரு பார்லர் ஆரம்பித்து அதன் பின்னர் அந்த பார்லரை விற்று விட்டார். ஆனால் இன்னும் விஜயாவின் பெயரில்தான் அந்த பார்லர் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும், அதே பார்லரில் தான் வேலை பார்த்துக் கொண்டிருப்பதையும் வீட்டில் அவர் யாரிடமும் சொல்லவில்லை.
இந்த நிலையில் முத்து தற்செயலாக அதை கண்டுபிடிக்கிறார். பார்லரின் உரிமையாளர் முத்துவின் காரில் பார்லருக்கு செல்ல, அப்போதுதான் முத்துவுக்கு இந்த உண்மை தெரிய வருகிறது. இதை முத்து தனது அப்பா அண்ணாமலையிடம் கூறிய நிலையில் அண்ணாமலை இதை ரோகிணியிடம் விசாரிக்கும் காட்சிகள் நாளைய எபிசோடில் வரும் என தெரிகிறது. அப்போது ரோகிணி எதையாவது சொல்லி சமாளிப்பாரா? அல்லது பார்லரை விற்றுவிட்டேன் என்ற உண்மையை சொல்வாரா என்பதை இனிவரும் எபிசோடுகளில் தான் பார்க்க வேண்டும்.
இருப்பினும் கடந்த பல எபிசோடுகளாக மீனாவுக்கு தொடர்ச்சியாக சோதனைகள் வந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக ரோகிணியின் ஒவ்வொரு பொய்யும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவில் அப்பா இருப்பதாக சொன்ன பொய், திருமணம் ஆகி குழந்தையை இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்ட பொய் மற்றும் பார்லர் கைமாறியாதை சொல்லாமல் இருந்த பொய் என அடுக்கடுக்காக பொய்கள் கூறியுள்ள ரோகிணி அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com