close
Choose your channels

'சிறகடிக்க ஆசை' ரோகிணி கணவரை பார்த்ததுண்டா? திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

Monday, September 9, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் அண்ணாமலை - விஜயாவின் மூத்த மருமகளாக ரோகிணி நடித்து வருகிறார் என்பதும் பல்வேறு சிக்கலுக்கு மத்தியில் அந்த சிக்கல்களை பொய் மேல் பொய் சொல்லி சமாளித்து வரும் கேரக்டரில் அவர் நடித்து வருகிறார் என்பதும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும்.

ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பதை மறைத்தது, பியூட்டி பார்லரை விற்றுவிட்டு அதில் வேலை செய்யும் ரோகிணி, பியூட்டி பார்லர் தனக்கு சொந்தம் என்று பொய் சொல்லி இருப்பது, தன்னை அடிக்கடி பிளாக்மெயில் செய்பவனிடம் பணம் கொடுப்பதை வீட்டில் உள்ளவர்களிடம் மறைப்பது, கிரிஷ் தன்னுடைய பையன் தான் என்பதை மறைப்பது உள்ளிட்ட பல்வேறு விதமான சிக்கலில் இருக்கும் ரோகிணி அவ்வப்போது திடீர் திடீர் என்று தோன்றும் பொய்களால் இப்போது வரை தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

ரோகிணி என்ற இந்த கேரக்டரில் சல்மா அருண் என்பவர் நடித்து வரும் நிலையில் இவர் சமூக வலைதளங்களிலும் பிரபலம் என்பதும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சல்மா அருண் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண நாளை ஒட்டி கணவருடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்களை அடுத்து அவருக்கு அவரது கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment