பார்லரை வித்தத ஏன் சொல்லலை.. ரோகிணியிடம் முத்து கேட்காத கேள்வியை கேட்கும் ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து தனது நண்பர்களுக்காக காரை விற்ற நிலையில் அந்த காரை ஏன் விற்றாய் என ரோகிணி, மனோஜ், விஜயா என மாறி மாறி கேட்க முத்து திருப்பி கேட்க மறந்த ஒரு கேள்வியை இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் பார்வையாளர்கள் கேட்டு வருகின்றனர்.
’சிறகடிக்க ஆசை’ சீரியலில் முத்து தனது காரை விற்று தனது நண்பர்களின் கடனை அடைத்து விட்டார். காரை விற்றதை வீட்டில் சொல்லாமல் மறைத்து தற்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில் ரோகிணி தற்செயலாக அவர் ஆட்டோ ஓட்டுவதை பார்த்து விஜயாவிடம் போட்டு கொடுத்து விடுகிறார்.
விஜயா உடனே தனது கணவர் அண்ணாமலையிடம் இது குறித்து கேட்க, அப்போது மீனாவிடமும் விஜயா இது குறித்து கேட்கிறார். ஆனால் மீனா தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல அப்போது முத்து வரும்போது முத்துவிடம் அண்ணாமலை காரை ஏன் விற்றாய் என்று கேட்கிறார்.
காரை விற்றதற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது என்றும் ஆனால் கண்டிப்பாக ஒருநாள் உங்களிடம் சொல்கிறேன் என்று முத்து கூறுகிறார். அப்போது விஜயா இது என்னுடைய வீடு, என்னுடைய வீட்டை அடமானம் வைத்து தான் காரை வாங்கி கொடுத்தேன், நீ காரை விற்றிருந்தால் அந்த பணத்தை என்னிடம் தானே கொடுத்திருக்க வேண்டும் என்று கேட்க, உடனே முத்து, ‘மனோஜ் தூக்கிட்டு போன 27 லட்ச ரூபாயை கொடுக்க சொல்லுங்க, அதற்கு அடுத்த நிமிடமே நானும் தருகிறேன் என்று கூறி அவருடைய வாயை அடைகிறார்.
இதனை அடுத்து ரோகிணி குறித்தும் சாடைமாடையாக முத்து சில விஷயங்களை பேசினாலும் முக்கியமான ஒன்றைக் கேட்க மறந்துவிட்டதாக பார்வையாளர்கள் இந்த சீரியல் குழுவினருக்கு ஞாபகப்படுத்தி உள்ளனர். என்னுடைய காரை விற்றதை மட்டும் வீட்டில் வந்து போட்டு கொடுத்தாயே, நீ உன்னுடைய பார்லர் விற்றுவிட்டு, அதே பார்லரில் சம்பளத்துக்கு தானே வேலை செய்கிறாய்? அதை ஏன் வீட்டில் சொல்லவில்லை? பார்லரை விற்ற காசை ஏன் வீட்டில் கொடுக்கவில்லை? என்று கேள்வியை முத்து கேட்டிருக்கலாம் என்றும் இந்த கேள்வியை அவர் கேட்க இது சரியான நேரம் என்றும் ஆனால் முத்து கேட்காது ஏன் என்று தெரியவில்லை என்றும் இந்த சீரியலை தொடர்ச்சியாக பார்த்து வருபவர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த தகவலை ‘சிறகடிக்க ஆசை’ கதை ஆசிரியர்கள் கவனிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout