சிறகடிக்க ஆசை.. பொங்கல் சீரில் ஏற்பட்ட பிரச்சனை.. விஜயாவை வறுத்தெடுக்கும் பாட்டி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறைந்த நாட்களில் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பொங்கல் சீர் செய்யும் காட்சிகள் அண்ணாமலை வீட்டில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஸ்ருதியின் அம்மா 11 தட்டுக்களுடன் மேளதாளங்களுடன் பொங்கல் சீர் கொண்டு வந்தார். மேலும் அவர் தனது மகளுக்கு வைர நெக்லஸ் பொங்கல் பரிசாக கொடுத்தார். அதுமட்டுமின்றி அண்ணாமலை விஜயாவுக்கும் பட்டு வேஷ்டி பட்டு சேலையும் கொடுத்து அசத்தினார்.
ஸ்ருதி அம்மா கொண்டுவந்த பொங்கல் சீரை பார்த்து விஜயா வாயை பிளந்து ஆச்சரியத்தில் இருக்கும் நிலையில் திடீரென மீனாவின் அம்மா ஒரே ஒரு தட்டில் சிம்பிளாக பொங்கல் சீர் கொண்டு வந்தார். ஆனால் அதில் இருந்த அரிசி அச்சு முறுக்கு ஸ்ருதிக்கு பிடித்து விட, அவர் அதனை பாராட்டினார். இதனால் ஸ்ருதியின் அம்மா அதிருப்தி அடைந்த நிலையில் அவர் வெளியே சென்று விட்டார்.
இதனால் கோபப்படும் விஜயா, மீனாவின் அம்மாவை வறுத்தெடுக்கிறார். இந்த நிலையில் ரோஹினி வீட்டில் இருந்து ஒரு கிண்ணம் கூட வரவில்லை என முத்து கிண்டல் செய்ய, அதனை அடுத்து ரோஹினி இடம் விஜயா, உன்னுடைய அப்பாவை வரச்சொல், சீர் கொண்டு வரச் சொல், அப்போதுதான் முத்து மீனா வாயை அடைக்க முடியும் என்று கூறுகிறார்.
இந்த நிலையில் வேறு வழியில்லாமல் ரோஹினி தன்னுடைய மாமா என்று ஒருவரை செட்டப் செய்கிறார். அவரை நேராக பாட்டியின் ஊருக்கு வர சொல்லிவிட்டதாக ரோஹினி பொய் சொல்கிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை தனது குடும்பத்தாருடன் தனது சொந்த கிராமத்துக்கு பொங்கல் கொண்டாட செல்கிறார். அங்கேயும் மீனாவை விஜயா வேலைவாங்க, பாட்டி விஜயாவை அதட்டி நீதான் இங்கு சமையல் வேலை செய்ய வேண்டும், உன் மற்ற ரெண்டு மருமகள்களையும் துணைக்கு வைத்து கொள் என்று கூற விஜயாவும், ரோஹினியும் ஸ்ருதியும் அதிர்ச்சி அடைகின்றனர். அவர்கள் செய்யும் சமையலும் அதனால் ஏற்படும் கூத்தும் இன்றைய எபிசோடில் காமெடியாக உள்ளது,
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com