close
Choose your channels

தொழிலதிபரை மணந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை.. வைரல் புகைப்படங்கள்..!

Thursday, October 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் நடித்த நடிகை தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பான ’சந்திரலேகா’ என்ற சீரியலில் நடிக்க தொடங்கிய ஹர்ஷலா, அதன்பின் பல தமிழ் சீரியல்களிலும் ஒரு சில கன்னட சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியலில் இவர் ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹர்ஷலாவுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இந்த திருமண புகைப்படங்களை ஹர்ஷலா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் அந்த பதிவில் ’என் கணவனை அறிமுகப்படுத்துகிறேன்’ என்று கேப்ஷனாக பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment