வெள்ளித்திரைக்கு வந்த 'சிறகடிக்க ஆசை' நடிகை.. டைட்டில் மற்றும் பூஜை புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அண்ணாமலை - விஜயா, முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி - ஸ்ருதி ஆகிய முக்கிய 8 கேரக்டர்களை வைத்து சீரியலை இயக்குனர் விறுவிறுப்பாக கொண்டு சென்று வருகிறார். இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த சீரியலில் ஹீரோயின் மீனாவின் தங்கை சீதா என்ற கேரக்டரில் நடிக்கும் சங்கீதா லியோனிஸ் என்பவர் திரைப்படத்தில் அறிமுகம் ஆகிறார். அவரது முதல் படத்தின் பூஜை இன்று நடந்துள்ள நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சங்கீதா லியோனிஸ் நடிகையாக அறிமுகமாகும் படத்திற்கு ’குற்றம் புதிது’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ரஜித் என்பவர் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்களை சங்கீதா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
’சிறகடிக்க ஆசை’ நடிகை சங்கீதா ஒரு பல் டாக்டர் என்பதும் டாக்டருக்கு படித்த அவர் தற்போது சின்னத்திரையில் நடித்து வரும் நிலையில் பெரிய திரையிலும் நடிக்க வந்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments