நீ யாரு.. நல்லா வருவேடா... கவுண்டமணியிடம் வாழ்த்து பெற்ற 'சிறகடிக்க ஆசை' நடிகர்..!

  • IndiaGlitz, [Monday,April 29 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஒருவரை கவுண்டமணி அழைத்து ’நீ யாரு, ரொம்ப நல்லா நடிக்கிற, வருங்காலத்தில் பெரிய ஆளாக வருவாய் என்று வாழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது மட்டுமின்றி டிஆர்பி ரேட்டிங் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த சீரியலின் நாயகனான முத்து கேரக்டரின் நண்பர் செல்வம் என்ற கேரக்டரில் நடிப்பவர் பழனியப்பன். இவர் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட சீரியலில் நடித்துள்ளார் என்பதும் தற்போது ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கும் பழனியப்பன் கவுண்டமணி நடித்து வரும் ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கவுண்டமணியுடன் ஒரு நீளமான டயலாக் காட்சியில் பழனியப்பன் நடித்து அசத்தியத்தை அடுத்து படப்பிடிப்பு முடிந்ததும் பழனியப்பனை கவுண்டமணி அழைத்துள்ளார்.

அப்போது, ‘நீ யார் என்று கவுண்டமணி கேட்டபோது பழனியப்பன் ’நான் லொள்ளு சபா ஆர்டிஸ்ட், பல சீரியல்களிலும் நாடகங்களிலும் நடித்துள்ளேன்’ என்று கூற’ உடனே ’அதான பார்த்தேன், நன்றாக டயலாக் பேசுகிறாய், நீ வருங்காலத்தில் பெரிய நடிகனாக வருவாய் என்று வாழ்த்தியதாக பழனியப்பன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.