கொஞ்சம் பார்த்து பண்ணுங்க: தமிழ் ராக்கர்ஸிடம் 'பலூன் இயக்குனர் கோரிக்கை

  • IndiaGlitz, [Monday,December 25 2017]

கோலிவுட் திரையுலக தயாரிப்பாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் இன்னும் முதல் நாளிலேயே இணையத்தில் புதிய படங்கள் வெளியாகி வருவதை தடுக்க முடியவில்லை. இதனை சட்டரீதியாக தடுப்பதை காட்டிலும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் அட்மினிடமே கோரிக்கை வைக்கும் மைண்ட்செட்டுக்கு திரையுலகினர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் 'சென்னை 2 சிங்கப்பூர்' இயக்குனர் அப்பாஸ் அக்பரின் கோரிக்கையை ஏற்று தமிழ் ராக்கர்ஸ், அந்த படத்தின் லிங்க்கை நீக்கிவிட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது 'பலூன்' இயக்குனர் சினிஷ், இதேபோன்ற ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், 'தமிழ் ராக்கர்ஸ், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க, ஒரே ஒரு வாரம் டைம் கொடுத்திங்கன்னா, என்னோட தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு' என்று கோரிக்கை வைத்துள்ளார். இவருடைய கோரிக்கையை தமிழ் ராக்கர்ஸ் நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விநியோகிஸ்தர் சங்க தேர்தல்: ஞானவேல்ராஜா தோல்வி

தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியில் இருந்து விலகிய பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட விநியோகிஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

சக்கை போடு போட்டதா சந்தானம் படத்தின் வசூல்?

'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றபோதிலும் தொடர்ச்சியான விடுமுறை தினங்கள் காரணமாக திருப்திகரமான வசூலையே பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' பெற்ற அபார ஓப்பனிங் வசூல்

சிவகார்த்திகேயன், அஜித்-விஜய்க்கு அடுத்த இடத்தை நெருங்கிவிட்டார் என்று ஏற்கனவே கூறப்பட்டு வரும் நிலையில் கடந்த வெள்ளியன்று வெளியான 'வேலைக்காரன்' படத்தின் வசூல் அதை நிரூபிக்கும் வகையில் உள்ளது

தினகரனுக்கு உறுதுணையாக இருப்பேன்: விஷால் அறிக்கை

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதா பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிமுகவை திணறடித்ததோடு, திமுகவை டெபாசிட் இழக்க வைத்து வெற்றி பெற்றுள்ளார் டிடிவி தினகரன்

வெற்றி பெறும் முன்பே விக்கிபீடியாவில் இடம்பிடித்த தினகரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரை எண்ணி முடிக்கப்பட்டுள்ள 8 சுற்றுகளிலும் தற்போது எண்ணப்பட்டு வரும் ஒன்பவதாவது சுற்றிலும் முன்னிலை வகித்து வருகிறார்