மத்திய பட்ஜெட்டில் திரையுலகினர்களுக்கான மிகபெரிய சலுகை

  • IndiaGlitz, [Friday,February 01 2019]

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி இல்லை என்பது உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் திரைத்துறையினர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. அதாவது அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் இனிமேல் நேரடியாக எந்த இடங்களுக்கும் திரையுலகினர் சென்றூ அனுமதி கோரி காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. திரைப்படங்களின் படப்பிடிப்புகள் சுலபமாக நடைபெற இணையதள வழி ஒற்றைச் சாளரமுறை அனுமதி அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை இதுவரை வெளிநாட்டு படப்பிடிப்பு குழுவினர்களுக்கு மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்திய திரைத்துறையினர்களுக்கும் கிடைத்துள்ளது.

அதேபோல் திரையுலகினர்களை அச்சுறுத்தி வரும் வீடியோ பைரசியை தடுக்கும் சட்டமும் இயற்றப்படும் என புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி இனி இணையதளங்களில் திருட்டுத்தனமாக படங்களை பதிவேற்றுவது, திருட்டு டிவிடி ஆகியவை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மகனை அடுத்து மகள் செய்த சாதனை: தளபதி விஜய் பெருமிதம்

விஜய்யின் மகன் சஞ்சய் வெளிநாட்டு படிப்பு, குறும்படத்தில் நடிப்பது, பிரபலங்களை பேட்டி எடுப்பது என பிசியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் விஜய்யின் மகளும்

அமலாபாலுக்கு பிடித்த ஆண் உடை!

'பாஸ்கர் தி ராஸ்கல், 'ராட்சசன்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கடந்த ஆண்டு நடித்த நடிகை அமலாபால் தற்போது 'அதோ அந்த பறவை' மற்றும் 'ஆடை' என்ற இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார்

ஒரு இரவுக்கு ஒரு கோடி ரூபாய்: நடிகைக்கு வந்த அதிர்ச்சி அழைப்பு

நடிகைகள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் இவற்றை பார்த்து ஒருசிலர் நடிகைகளை பணத்திற்காக அழைப்பதும் அவ்வப்போது நடந்து வரும் சம்பவங்களாக உள்ளது.

அஜித்துக்கு நன்றி தெரிவித்த அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்சா என்ற ஆளில்லா விமான வடிவமைப்பு குழுவிற்கு நடிகர் அஜித் ஆலோசகராக பணிபுரிந்தார் என்பது தெரிந்ததே.

'இளையராஜா 75' நிகழ்ச்சி குறித்து சென்னை ஐகோர்ட்டின் முக்கிய உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள 'இளையராஜா 75' என்ற திரைக்கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது.