'சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்': சிவா, மேகா ஆகாஷ் படத்தின் டீசர்

  • IndiaGlitz, [Saturday,February 11 2023]

தமிழ் திரை உலகின் காமெடி ஹீரோவான அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள அடுத்த திரைப்படத்திற்கு ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் சற்று முன் வெளியாகி உடனே டீசர் வீடியோ வைரல் ஆக வருகிறது .

ஒரு வித்தியாசமான ஸ்மார்ட் போன் சிவாவின் கையில் கிடைத்துள்ள நிலையில் அந்த ஸ்மார்ட் போனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளை காமெடியாக சொல்லி இருக்கும் படம் தான் ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா, அஞ்சுகுரியன், மேகா ஆகாஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் பூபதி செல்வராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இந்த படத்தின் ரிலீஸ் அதிகம் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.